நடிகை சமந்தா இப்போது சிடாபெல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் மயோசிடிஸ் நோய்க்கு கடுமையாக சிகிச்சையும் எடுத்து வருகிறார். அதற்காக பல மணி நேரம் உடற் பயிற்சி செய்து வரும் அவர் ஏற்கனவே கமிட்டான படங்களுக்கு தவறாமல் சூட்டிங் சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து கிடைக்கும் நேரங்களில் ஆன்மீக சுற்றுலாவும் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். அண்மையில் பழனி சென்ற அவர் முருகப்பெருமானை தரித்தார். சிவராத்திரியையொட்டி ஆண்டுதோறும் கடைபிடிக்கும் சிவராத்திரி விரதத்தையும் மேற்கொண்டார்.
மேலும் படிக்க | சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்?
தொடர்ச்சியான படப்பிடிப்பு மற்றும் வழிபாடுகள், சிகிச்சைகள் காரணமாக சமந்தா இப்போது முன்புபோல் சுறுசுறுப்பாக இல்லை. அவருடைய முகத்திலேயே சோர்வு தென்படுகிறது. இதுகுறித்து பேசியிருக்கும் அவருடன் பேம்லிமேன் சீரியலில் நடித்திருக்கும் மனோஜ், சமந்தா மிகச்சிறந்த கடின உழைப்பாளி என்றாலும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பது நல்லது. மேலும் அவர் கடினமான உடற்பயிற்சிகளையெல்லாம் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது.
என்னை பொறுத்தவரையில் அதனை சமந்தா குறைத்துக் கொள்வது நல்லது. அவரை பற்றி எனக்கு தெரியும். நாங்கள் ஒன்றாக நடித்திருக்கிறோம். மனதளவிலும் உடலளவிலும் பலசாலி எனத் தெரிவித்துள்ளார். பேம்லிமேன் சீரிஸில் சமந்தாவுடன் மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் தமிழகத்தில் சர்ச்சையில் சிக்கியது. தமிழர்களின் உணர்வுகளை சீண்டும் வகையில் இந்தப் படம் அமைந்ததாகவும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அடுத்த படத்தின் பணியை தொடங்கிய ஹெச்.வினோத்! ஹீரோ யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ