அஸ்தியாக வந்த மீனாட்சி..சோகத்தில் குடும்பத்தார்..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்!

Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்று நடைபெற இருக்கும் சம்பவங்கள் குறித்து தெரிந்து கொள்வோமா.   

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2023, 11:55 AM IST
  • ஜீ தமிழின் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
  • ஊருக்கு சென்ற மீனாட்சி இறந்து விட்டதாக செய்தி வருகிறது.
  • குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அஸ்தியாக வந்த மீனாட்சி..சோகத்தில் குடும்பத்தார்..மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக விளங்கும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடருக்கு பலத்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

நேற்றைய எபிசோட்:

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் நேற்றைய எபிசோடில் சக்தி கொடுத்த டிரஸ்சை வெற்றி கிழித்து எறிந்து விடுகிறான். பிறகு சாட்ஸுடன் மீனாட்சி மெஸ்ஸுக்கு வருகிறான். அங்கே சாட்சுடன் வெற்றியை பார்த்த சாந்தா வெட்கப்பட்டு வெற்றிக்கு டிரஸ் கொடுக்கிறாள். பிறகு மீனாட்சி வரும் விஷயத்தை சொல்ல வெற்றி சந்தோஷப்படுகிறான். மேலும் யமுனா, துர்கா, சக்தி, வெற்றி என அனைவரும் கல் கோயிலில் மீனாட்சி நல்ல முறையில் வீட்டுக்கு வர வேண்டும் என்று சாமி கும்பிடுகிறார்கள்.அதனை தொடர்ந்து நீதிமணி மீனாட்சியை பார்ப்பதற்காக புது டிரஸ் எல்லாம் அணிந்து கொண்டு பரபரப்பாக கிளம்ப அதை புஷ்பா பார்த்துவிட்டு நீதிமணியை திட்டுகிறாள். 

Meenakshi Ponnunga

மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!

மீனாட்சி வீட்டில் சாந்தா ஆரத்தி கலக்கி வைத்துக் கொண்டு மீனாட்சியை வரவேற்க காத்துக் கொண்டிருக்க ஒரு கார் வருகிறது. காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து இது மீனாட்சி வீடா என கேட்டு உறுதி செய்ய பிறகு மற்றொருவர் ஒரு அஸ்தி கலசத்தை கொண்டு வந்து கொடுக்க, சாந்தாவும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒரு பையில் மீனாட்சியின் டிரஸ்ஸை கொடுத்துவிட்டு, மீனாட்சி ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார்கள் என்று கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

மீனாட்சி இறந்து விட்டதாக ஒருவர் அஸ்தி கொண்டு வந்து கொடுக்க அனைவரும் அதிர்ச்சியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, நீதிமணி மீனாட்சியை வரவேற்க அவசர அவசரமாக கிளம்பி கொண்டு இருக்க, எதிரே வந்த சங்கிலி மீனாட்சி பானையில் வந்திருப்பதாக கிண்டலாக சொல்கிறான். புரியாமல் நிற்கும் நீதிமணிக்கு மீனாட்சி ஃபயர் ஆக்சிடென்ட்- ல் இறந்து விட்டதாக சொல்கிறான்.

Meenakshi Ponnunga

இதை கேட்ட நீதி மணி சங்கிலியை அடித்து தள்ளி விட்டு இது மட்டும் உண்மையாக இருந்தால் உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறி அவசரமாக கிளம்புகிறான். இங்கே மீனாட்சி வீட்டில் ஊர் மக்கள் சூழ்ந்து இருக்க அஸ்தியை வைத்து சாந்தா, யமுனா மற்றும் துர்காவும் அழுது கொண்டிருக்கிறார்கள். நீதிமணி மீனாட்சியின் அஸ்தியை பார்த்து துக்கம் தாங்க முடியாமல் அழுகிறான்.

மறுபக்கம் ஷக்தி கல்கோவிலில் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் வெற்றி அவளை சமாதானப்படுத்தி அஸ்தி இருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறான். ஊர் பெரியவர்கள் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று கூற, வாரிசு இல்லாத மீனாட்சியின் அஸ்தியை அவளின் கணவர் தான் கரைக்க வேண்டும் என்று சாந்தா சொல்கிறாள்.
ஆனால் நான் உயிருடன் இருக்கும்போது நீதிமணி அஸ்தியை கரைக்க கூடாது என்று புஷ்பா மறுக்கிறாள். புஷ்பா மறுப்பு சொன்னதால் பெரிய மருமகன் தான் அஸ்தியை கரைக்க வேண்டும் என்று சாந்தா சொல்ல வெற்றி யோசிக்கிறான்.

Meenakshi Ponnunga

காணத்தவறாதீர்கள்:

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை இரவு 9:30 மணிக்கு காணதவறாதீர்கள்.

மேலும் படிக்க | ‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News