மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்... அவமானப்படுத்திய ரங்கநாயகி.‌. சக்தி எடுத்த திடீர் முடிவு!

Meenakshi Ponnunga Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 24, 2023, 12:20 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகிறது.
  • தினமும் இரவு 9 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஒளிப்பரப்பாகிறது.
  • இதனை நீங்கள் Zee5 தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யலாம்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்... அவமானப்படுத்திய ரங்கநாயகி.‌. சக்தி எடுத்த திடீர் முடிவு! title=

Meenakshi Ponnunga Serial Today's Episode: தொலைக்காட்சி சீரியல்கள் நம் மக்களின் அன்றாட  வாழ்வில் ஒரு முக்கியமான அம்சமாகவே மாறிவிட்டது எனலாம். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, வீட்டில் ஓய்வில் இருக்கும் தாத்தா, பாட்டிகள், இல்லத்தரசிகள், வேலை முடித்து வரும் கணவன்மார்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வரை சீரியல்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்கள் பல்வேறு தரப்பில் உள்ளனர்.

அப்படியிருக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களும் பெரும் கவனத்தை பெற்றுள்ளன எனலாம். சீதாராமன், கார்த்திகை தீபம், மாரி, அண்ணா, சந்தியா ராகம், நளதமயந்தி போன்ற சீரியல்களும் பரவலான ஈர்ப்பை பார்வையாளர்களிடத்தில் பெற்றுள்ளன. அந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கும் ரசிகர்கள் உள்ளனர். 

சக்தி - ரங்கநாயகி வாக்குவாதம்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆட்டோவில் மீனாட்சி வீட்டுக்கு வந்து இறங்க, அங்கே வெற்றி வைத்தியருடன் நிற்கிறான். தன் அம்மா செய்தது தவறு என வருத்தப்படும் வெற்றி, இந்தப் பிரச்சினையை சீக்கிரமே சரி செய்வதாக மீனாட்சியிடம் சொல்கிறான்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: வார்னிங் கொடுத்த சீதா.‌.. பழி தீர்க்க வேற மாதிரி ப்ளான் போடும் மகா

ரங்கநாயகி கோவிலில் திட்டியதை தெரிந்துகொள்ளும் சக்தி, வெற்றிக்கு போன் செய்கிறாள். ஆனால் அதை எடுக்கும் பூஜா அமைதியாக இருக்க, வெற்றி என நினைக்கும் சக்தி, இன்று வீட்டுக்கு வரப் போகிறேன் என்கிறாள். பூஜா போனை கட் செய்துவிடுகிறாள். 

உடனே ரங்கநாயகியிடம், இத்தனை திட்டி வெளிய அனுப்பியும் இன்னும் சக்தி வெற்றியை டார்ச்சர் பண்றா, உங்களை அவமானப்படுத்தவே அவ இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறா என்கிறாள். அவள் வந்தால் அவளை சும்மா விட மாட்டேன் என்கிறாள் ரங்கநாயகி. அப்பொழுது அங்கே சக்தி வந்து விடுகிறாள். 

இதையடுத்து ரங்கநாயகி சக்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தன் அம்மாவை திட்டியது தவறு என்று சக்தி ரங்கநாயகியிடம் வாக்குவாதம் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மீனாட்சி பொண்ணுங்க: எதில் பார்ப்பது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்தாண்டு ஆக. 1ஆம் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 செயிலி மூலமும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | மன்னிப்பா, மீண்டும் சர்ச்சையா? - 'சக திரைநாயகி திரிஷாவே' மன்சூர் பரபர அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News