ரங்கநாயகி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga TV Serial Online: இன்றைய எபிசோடில் கல்யாண நாள் விழா நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சக்தியும் வெற்றியும் பேசிக் கொண்டு ரொமான்ஸ் ஆக இருக்க சரண்யா வர அவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள்.  

Written by - RK Spark | Last Updated : Oct 31, 2023, 11:27 AM IST
  • எழுந்து நடந்து வந்த செல்வ முருகன்.
  • ரங்கநாயகி போட்ட கண்டிஷன்.
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்.
ரங்கநாயகி போட்ட கண்டிஷன் - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்! title=

தமிழ் சீரியலுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே சீரியல் டிஆர்பியில் கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு சில சீரியல்கள் பெரிய பிராண்டாகவும், பாப்புலராகவும் இருக்கின்றன.  அந்தவரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அடையாளமாக இருக்கிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தினம் தினம் புதிய திருப்பங்களுடன் செல்லும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்த புதிய திருப்பம் ஒன்று இன்றைய எபிசோடில் நிகழ இருக்கிறது. 

மேலும் படிக்க | ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி!

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கல்யாண நாள் விழா நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று சக்தியும் வெற்றியும் பேசிக் கொண்டு ரொமான்ஸ் ஆக இருக்க சரண்யா வர அவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள். அதனை தொடர்ந்து ரங்கநாயகிக்கு சரண்யா அழகாக டிரஸ் செய்து விடுகிறாள். பிறகு செல்வ முருகனை அவர்கள் தேட சக்தி வீல்சேரை மட்டும் தள்ளி கொண்டு வருகிறாள். செல்வமுருகன் எங்கே என்று அனைவரும் ஆச்சரியமாக பார்க்க செல்வமுருகன் நடந்து வருகிறார். 

mp

சக்தி தனக்கு கொடுத்த ஆயில் ட்ரீட்மெண்ட்டால்,இது சாத்தியமானது என்று கூற, சக்தி தன் அம்மா தனக்கு சித்தர் மூலிகை தைலம் கொடுத்ததை கூறுகிறாள்.அனைவரும் சக்திக்கு நன்றி கூறுகிறார்கள்.  அதன் பிறகு ஐயர் வந்து அனைவருக்கும் காப்பு கட்டுகிறார்.காப்பு கட்டியவர்கள் ஊரை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லுகிறார். இதனால் ரங்கநாயகி சக்தியிடம் சம்மந்தி சடங்கு சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாள்.சக்தியும் வெற்றியும் மீனாட்சி வீட்டிற்கு சென்று மீனாட்சியிடம் சம்மந்தி சடங்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறுகிறாள்.இதற்கு மீனாட்சியும் ஒப்புக்கொள்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News