புதிய ப்ரமோக்களால் தெறிக்கவிடும் வலிமை!

பிப்ரவரி-24 ம் வலிமை படம் வெளியாகவுள்ள நிலையில் வரிசையாக படத்தின் ப்ரோமொக்களை வெளியிட்டு ரசிகர்களை படக்குழு திக்குமுக்காட செய்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2022, 05:03 PM IST
  • வலிமை பிப்ரவரி 24-ம் தேதி வெளிவருகிறது.
  • புரமோஷனல் வேலைகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
  • ரசிகர்கள் மிகுந்த உற்சாகம்.
புதிய ப்ரமோக்களால் தெறிக்கவிடும் வலிமை! title=

உலகளவில் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் ''வலிமை'' படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்து இருக்கிறது.  ஒரு காலத்தில் அப்டேட்டே வெளியாகவில்லையே என்று ரசிகர்கள் வன்மத்தை கக்கி கொண்டிருந்த நிலையில் இப்போது தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகளாக வெளியாகி பலரையும் பரவசம் அடைய செய்திருக்கிறது.  

மேலும் படிக்க | வலிமை டிக்கெட் புக்கிங் ஆரம்பம் எப்போது?

இப்பட தயாரிப்பாளர் போனி கபூரை வசைபாடியவர்கள் தற்போது இவரை எக்கச்சக்கமாய் புகழ்ந்து போற்றி வருகின்றனர்.  அதற்கெல்லாம் காரணம் இவர் வரிசையாக வெளியிட்டு வரும் வலிமை படத்தின் ப்ரோமோக்கள் தான்.  இவர் வெளியிட்ட முதல் ப்ரோமோவே வலிமை படத்தை இப்போதே ரிலீஸ் செய்யுங்கள் என்று ரசிகர்கள் போராட்டம் செய்யும் அளவிற்கு இருந்தது.  நல்ல சக்திக்கும், கேட்ட சக்திக்கும் இடையே நடக்கும் உண்மையான போராட்டம் தான் வலிமை என்ற கேப்ஷனோடு வெளியிட்ட முதல் ப்ரோமோ ரசிகர்களின் கரகோஷங்களை பெற்றது.

 

ரணகளமாக, அதிரடி காட்சிகளுடன் வெளியான முதல் பிரேமாவை ரசிகர்கள் ரசித்து முடிப்பதற்குள், படத்தின் இரண்டாவது சூடாக அதே சமயம் சுவையாகவும் வெளியானது.  உணர்ச்சியின் சக்தி என்ற கேப்ஷனோடு இவர் வெளியிட்ட இரண்டாவது ப்ரோமோ பலரையும் உணர்வுபூர்வமாக ரசிக்க அச்செய்து இருக்கிறது.  நான் பார்த்த முதல் முகம் நீ எனும் தாய்-மகன் பாச பிணைப்பை வெளிக்காட்டும் படலையோடு இந்த இரண்டாவது ப்ரோமோ பலரது தசைகளையும் தளர செய்து, கண்களை பாசத்தால் நனைத்துள்ளது.

 

இந்த இரண்டு ப்ரோமோக்களையும் முழுமையாக கொண்டாடி தீர்ப்பதற்குள் அடுத்த ப்ரோமோ வெளியாகி ராசிகளை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ரேஸிங், சேசிங், ஆக்ஷன் என்று சலிப்பு தட்டாத வகையில் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவும் பட்டையை கிளப்பியுள்ளது.  ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.  ''நேர்கொண்ட பார்வை'' படத்திற்கு பிறகு ஹெச்.வினோத்-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வலிமையுடன் போட்டிபோடும் மற்றொரு டாப் ஹீரோ படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News