‘தளபதி 63’ திரைப்படதில் இணையும் பிரபல அரசியல் பேச்சாளர்...

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

Last Updated : Feb 24, 2019, 08:12 PM IST
‘தளபதி 63’ திரைப்படதில் இணையும் பிரபல அரசியல் பேச்சாளர்... title=

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் இலக்கியவாதி நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 63’. தற்போது இத்திரைப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர்களோடு பிரபல அரசியல் பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் அவர்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்ற நாஞ்சில் சம்பத் அவர்கள், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடிக்கின்றார் என தெரியவந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 

இத்திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News