நினைத்தேன் வந்தாய்: வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த குழந்தைகள்.. எழிலின் வார்த்தையில் காத்திருக்கும் ட்விஸ்ட்

ninaithen vandhai zee tamil serial update: இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 6, 2024, 02:18 PM IST
  • நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த குழந்தைகள்.
  • எழிலின் வார்த்தையில் காத்திருக்கும் ட்விஸ்ட்
நினைத்தேன் வந்தாய்: வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த குழந்தைகள்.. எழிலின் வார்த்தையில் காத்திருக்கும் ட்விஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்கு குழந்தைகளும் சேர்ந்து அஞ்சலியை கிள்ளிய கேர் டேக்கரை போட்டு அடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Add Zee News as a Preferred Source

அதாவது, எழில் குழந்தைகள் கேர் டேக்கரை அடிப்பதை பார்த்து விடுகிறான், இதனால் குழந்தைகளை கூப்பிட்டு திட்ட அவர்கள் கேர் டேக்கர் செய்த விஷயத்தை சொல்ல வர எழில் அதை கேட்க மறுக்கிறான், எங்கேயும் நகராமல் இங்கேயே நிற்க வேண்டும், தண்ணீர் கூட குடிக்க கூடாது என தண்டனை கொடுக்கிறான். 

இதனையடுத்து கனகு வீட்டிற்கு வர குழந்தைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்து என்னாச்சு என நடந்த விஷயங்களை சொல்லி அஞ்சலியை அந்த கேர் டேக்கர் கிள்ளியதையும் வீடியோ எடுத்து வைத்திருப்பதாக சொல்லி காட்ட கனகு இதை பாட்டியிடம் சொல்ல பாட்டி இதை நான் பார்த்து கொள்கிறேன் என்று குழந்தைகளை ரூமுக்கு அனுப்பி வைக்கிறார். 

மேலும் படிக்க | டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள 4 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!

பிறகு எழிலிடம் வந்து நீ குழந்தைகளை கண்டிக்கிறது தப்பில்ல, அதே சமயம் அவங்க தரப்பு விஷயத்தையும் கேட்கணும், இதுவரைக்கும் நீ கூட குழந்தைகளை கை நீட்டி அடித்தது கிடையாது, ஆனால் அந்த பொண்ணு அடிச்சிருக்கா என்று வீடியோவை காட்ட எழில் கேர் டேக்கரை திட்டி வெளியே துரத்துகிறான். நேராக அவள் மனோகரி வீட்டிற்கு வர மனோகரி எழிலை அடைவதற்காக நான் அவன் பொண்டாட்டியை கொன்னேன், உன்னை உள்ளே அனுப்பி வைச்சேன். ஆனால் நீ எல்லாத்தையும் சொதப்பிட்ட என அந்த பெண்மணியை பிடித்து திட்டுகிறாள். 

குழந்தைகள் ரூமுக்குள் இருக்கும் போது இடி இடிக்க அம்மா இருக்கும் போது அவரை கட்டி பிடித்து கொண்ட விஷயங்களை நினைத்து பார்க்கின்றனர். அப்பா நம்ம சொல்றதை கேட்கவே மாற்றாரு, இந்த வீட்டில இருக்கவே பிடிக்கல என்று சொல்ல அபி அம்மா கொடைக்கானலில் இருந்த ஆசிரமத்துக்கு போய்டலாம் என்று சொல்ல முதலில் அஞ்சலி அப்பா பாவம் என்று யோசிக்க பிறகு எல்லாரும் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுக்கின்றனர். 

மறுநாள் காலையில் குழந்தைகள் நாலு பேர் மனதிலும் போலாமா வேண்டாமா? என்ற குழப்பம் உருவாக அபி அப்பா மன்னிப்பு கேட்டால் இங்கேயே இருக்கலாம், இல்லனா கிளம்பி போய்டலாம் என்று முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் LOVER! இது தான் கதையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News