ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு மகாமுனி!

நடிகர் ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள  மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

Updated: May 17, 2019, 01:56 PM IST
ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு மகாமுனி!
Screengrab

நடிகர் ஆர்யா நடிப்பில் மௌனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள  மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

மௌனகுரு படத்தை தொடர்ந்து இயக்கநர் சாந்தகுமார் இயக்கும் திரைப்படம் மகாமுனி. ஏழு ஆண்டு இடைவேளைக்கு பின்னர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படத்தில் ஆர்யா நடிக்கின்றார். திருமணத்துக்குப் பின்னர் ஆர்யா நடிக்கும் முதல் படம். 
இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். இவர் தற்போது தளபதி 63 திரைப்படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மஹிமா நம்பியார், ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், காளி வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளனர். 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மகாமுனியின் படப்பிடிப்பு முடிந்ததாக ஆர்யா ட்வீர் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை மகாமுனி படத்தின் ஃபர்ட்ஸ் லுக்கும், டீஸர் வெளியாகியுள்ளது.

டீசரைப் பார்க்கும்போது மௌனகுரு படத்தைப்போலவே கதாப்பாத்திரங்கள் அனைத்தும்  மிகவும் யதார்த்த மனிதர்களாக உருவாக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. காட்சியமைப்புகளும் இந்தப்படம் ஒரு க்ரைம் திரில்லராக வரவிருக்கிறது என்பை உணர்த்துகிறது.

இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.  இந்தப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா, கே வி ஆனந்த் இயக்கத்தில்  சூர்யா நடிப்பில் உருவாகிவரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.