மாயாவிடம் உண்மையை மறைக்கும் சந்தியா - சந்தியாராகம் சீரியல் அப்டேட்!

Padamati Sandhyaragam: நேற்றைய எபிசோடில் பிளாஸ்கட்டில் ஜானகிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை கிஷோரை சந்தியா திருமணம் செய்து கொள்ள இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.    

Written by - RK Spark | Last Updated : Oct 12, 2023, 01:29 PM IST
  • மாயாவிடம் உண்மையை மறைக்கும் சந்தியா.
  • ஜானகிக்கு தடை போட்ட மாமியார்.
  • சந்தியாராகம் இன்றைய எபிசோட் அப்டேட்.
மாயாவிடம் உண்மையை மறைக்கும் சந்தியா - சந்தியாராகம் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியாராகம். நேற்றைய எபிசோடில் பிளாஸ்கட்டில் ஜானகிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை கிஷோரை சந்தியா திருமணம் செய்து கொண்டதும் ரகுராம் அம்மா சத்தியம் வாங்கிய விஷயமும் தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது அமெரிக்காவில் இருக்கும் சந்தியா மாயாவிடம் தன்னுடைய அக்கா ஜானகி பற்றியும் அவளது பாசத்தை பற்றியும் சொல்கிறாள், பிறகு அக்காவிடம் பேச வேண்டும் என்ற ஆசையுடன் போன் செய்ய இங்கே ஜானகி வீட்டில் போன் அடிக்க சந்தியா அக்கா போனை எடு அக்கா, உன்கிட்ட பேசணும் என புலம்பியபடி இருக்கிறாள். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!

வீட்டில் போன் அடிக்க யாரும் போனை எடுக்காமல் வேடிக்கை பார்க்க வீட்டில் இருக்கும் சின்னப்பையன் ஓடி வந்து போனை எடுத்து விடுகிறான், ஜானகி தான் பேசுவதாக நினைத்து சந்தியா தனது மனதுக்குள் இருக்கும் வருத்தத்தையும் அக்கா மீது இருக்கும் பாசத்தையும் ஏக்கத்தையும் பேசுகிறாள். வீட்டிற்குள் ரகுராம் வருவதை கவனித்த அந்த சின்னப்பையன் போனை கீழே வைத்து விட்டு ஓடி விட ரகுராம் போன் எடுத்து சந்தியா பேசுவது அனைத்தும் கேட்டுவிட்டு வெளியே கிளம்ப ஜானகி போனை நோக்கி ஓடி வர அவளது மாமியார் உங்க அப்பா இல்லனாலும் அவர் செய்த் சத்தியம் இன்னும் அப்படியே தான் இருக்கு என்று சொல்ல ஜானகி தங்கையிடம் பேச முடியாமல் தவிக்கிறாள். கண் கலங்கி துடிக்கிறாள். 

zee

அதனை தொடர்ந்து புவனேஷ்வரி கோவில் திருவிழாவில் தனக்கு முதல் மரியாதை கொடுக்காத பூசாரியை கட்டி வைத்து அடித்து தனது வில்லத்தனத்தை காட்டுகிறாள். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் மாயா ப்ரிட்ஜில் கேக் அப்படியே இருப்பதை பார்த்து அதனை கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்து சாப்பிட சொல்ல அவள் டயட்டில் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். வெய்ட் மெஷினை வைத்து சந்தியாவின் எடையை மாயா செக் செய்ய அவள் மெலிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய உங்க அப்பா வருவதால் எடையை குறைப்பதாக சொல்லி சமாளித்து தனக்கு கேன்சர் இருப்பதை மறைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News