கர்ப்பமாக இருக்கும் முல்லைக்கு புது பிரச்சனை: பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர்பாராத திருப்பங்கள்

தொடர்ந்து பல பிரச்சனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர்பாராத திருப்பமாக முல்லைக்கு புதிய பிரச்சனை ஏற்படுகிறது. இதன் ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 12, 2023, 08:36 AM IST
  • பல பிரச்சனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
  • முல்லைக்கு புதிய பிரச்சனை ஏற்படுகிறது.
  • மீண்டும் கண்ணன் பதட்டம் அடைகிறார்.
கர்ப்பமாக இருக்கும் முல்லைக்கு புது பிரச்சனை: பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர்பாராத திருப்பங்கள் title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. தமிழிலேயே உருவான இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழில் நல்ல டிஆர்பியுடன் இன்னும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் இந்த சீரியலை பல இல்லத்தரசிகள் விரும்பி பார்த்து வந்தாலும் நெட்டிசன்கள் பலரும் இந்த சீரியலை ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கதையில் ஃபைனான்ஸ் கம்பெனியிடம் கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் தவித்த கண்ணனை கண்டப்படி பணம் வாங்க வந்தவர்கள் பேசுகின்றனர், இதனால் கடுப்பான கண்ணன் அவர்களை அடிக்கச் செல்ல, திருப்பி கண்ணனும் அடிவாங்குகிறார். இதை தெரிந்த கதிர், தம்பியை அடித்தவர்களை திருப்பி அடிக்க, இதனால் ஜெயிலுக்கு சென்று பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். இந்த விஷயத்தை அறிந்த மூர்த்தி, கண்ணை அடிக்க ஃபைனான்ஸியரிடன் கதிரை வெளியே எடுக்குமாறு கெஞ்ச அவர்கள் 5 லட்சம் பணத்தை கட்ட சொல்கின்றனர். அங்கும் இங்கும் அலைந்து ஒரு வழியாக அந்தப் பணத்தை கட்டி வெளியே வருகிறார் கதிர். இதன் பின் பிரிந்திருந்த கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் கதிர். இவர்களின் வருகை பிடிக்காமல் இருக்கும் மூர்த்தி வந்தவுடன் சண்டை போட வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா சித்தியிடம் கடன் வாங்கி இருக்கும் நிலையில் அந்த பணத்தை கேட்டு அவர் வீட்டிற்கு வர யாரிடமும் சொல்லிடக்கூடாது என்பதற்காக கண்ணன் பதட்டம் அடைகிறார். இதனால் சித்தியின் கடனை அடைக்க தொடர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களிடங்களையும் வைத்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

மேலும் படிக்க | The Kerala Story: கேரளா ஸ்டோரி படம் எப்போது OTTயில் வெளியாகும்? லேட்டஸ்ட் அப்டேட்!

இதன் காரணமாக மீண்டும் மூர்த்தி ஐஸ்வர்யாவின் மீது கோபத்தில் இருந்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பல பிரச்சனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக மற்றொரு பிரச்சனை பாண்டியன் ஸ்டோரேஸ் குடும்பபத்தை நோக்கி செல்கிறது. அதன்படி இந்த வார எபிசோடில் கதிர் முல்லை இருவரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்க பைக்கில் ஒருவர் முல்லையை இடித்து விடுகிறார், இதனால் முல்லை வேகமாக கீழே விழுந்து விடுகிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இதன் காரணமாக வயிற்றில் பலத்தமாக அடிப்பட தலையிலும் ரத்தம் சொட்டுகிறது வலி தாங்க முடியாமல் முல்லை கத்த கதிர் அழுத்துக்கொண்டே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இவ்வாறு முல்லை  குழந்தைக்கும் என்ன ஆபத்து ஏற்படப் போகிறது? மேலும் முல்லைக்கு என்ன நடக்க போகிறது? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு முல்லைக்கு இப்படி ஆகிவிட்டது என்ற பதட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இதனை அடுத்து இந்த விபத்தில் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்துவிட முடியும் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் பிழைத்து விடுகிறார். இவ்வாறு இதனை வைத்து தான் இந்த வார எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் படிக்க | ராட்சனை மிஞ்சிவிட்டதா? அசோக் செல்வனுக்கு கேள்வி எழுப்பிய விஷ்ணு விஷால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News