வெளியானது ‘பரியேறும் பெருமாள்’ மேக்கிங் வீடியோ...

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2018, 12:39 PM IST
வெளியானது ‘பரியேறும் பெருமாள்’ மேக்கிங் வீடியோ... title=

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.

இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து என பலர் நடித்திருக்கிறார்கள். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகி ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்ப்பை பெற்றது. படத்தில் சட்டக்கல்லூரி மாணவராக நடிகர் கதிர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செப்டம்பர் 9 ஆம் தேதி படத்தின் பாடல்கள் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு, படம் செப்டம்பர் மாதம் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது, இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

 

Trending News