Pathu Thala: பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு...? சிம்புவின் ஆல்டைம் ரெக்கார்டா!

Pathu Thala Movie First Day Collection: சிம்பு நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2023, 11:16 AM IST
  • பத்து தல படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனங்கள் வருகின்றன.
  • இந்த படத்திற்கு தசரா, விடுதலை என போட்டி படங்கள் வந்துள்ளன.
Pathu Thala: பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு...? சிம்புவின் ஆல்டைம் ரெக்கார்டா!

Pathu Thala Movie First Day Collection: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பின், பத்து தல படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது. சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பத்து தல படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 

படத்தின் எதிர்பார்ப்பை போலவே முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டமும் அமைந்தது. இந்த படம் தெலுங்கில் 2018ஆம் ஆண்டில் வெளியான மப்டி படத்தின் ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிம்பு ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் இண்டர்வலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் சிம்புவின் என்ட்ரி இருக்கும் என்றாலும், இரண்டாம் பாதி முழுவதும் சிம்புவின் ஆதிக்கம்தான் என்றும், படத்தை முழுவதுமாக தூக்கி சுமந்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இத்திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்துள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | பத்து தல படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

படத்தின் எதிர்பார்ப்பு, விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டி அதன் வசூல் என்பதால் வெற்றியை முடிவு செய்யும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும், பத்து தல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன்,"பிளாக்பஸ்டர் பத்து தல" என ட்வீட் செய்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் ரீ-ட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர். 

மேலும், படம் தற்போது 450 திரையரங்குகளில் 650 ஸ்கிரீன்களில் படம் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்து தல படம் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ. 7 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்நாட்டிற்கு வெளியே மொத்தம் ரூ. 4 கோடி என மொத்தம் ரூ. 11 கோடியை முதல் நாளில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் சிம்புவின் திரைப்படங்களிலேயே முதல் நாள் அதிக வசூலை குவித்த படம் என கூறப்படுகிறது. 

பத்து தல படத்துடன் நானி நடித்துள்ள தசாரா படமும் வெளியாகியுள்ளது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை (முதல் பாகம்) படம் இன்று வெளியாக உள்ளது. மேலும், வார இறுதியில்தான் எந்த திரைப்படம் வசூலில் முன்னணியில் வரும் என்பது தெரியவரும்.

மேலும் படிக்க | ரஜினி படத்தில் நடித்ததால் திரை வாழ்கை முடிவுக்கு வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News