திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பாடி மாடிஃபிகேஷன் கல்ச்சர் என்ற பெயரில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வருபவர் ஹரிஹரன். இவர் மும்பைக்கு சென்று தனது நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டுள்ளார். மேலும், இவற்றை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தனது நண்பரான ஜெயராம் என்பவரையும் அழைத்து வந்து, இதேபோல் நாக்கை பிளந்து அறுவை சிகிசை செய்து டாட்டூ போட்டுள்ளார். மருத்துவ கட்டுப்பாட்டை மீறி அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தவறான பாதைக்கு செல்ல முன்னுதாரணமாக இருந்த ஹரிகரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுத்து இதனை தடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பலர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 7 மாதங்களுக்கு முன்பு மும்பை சென்ற ஹரிஹரன், தனது கண்களையும் நீல நிறமாக மாற்றியது தெரிய வந்துள்ளது. இதற்காக ரூ. 7 லட்சத்தை அவர் செலவு செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் தான் செய்து கொண்டது போல மற்றவருக்கும் செய்துக்கொள்ள தன்னை அணுகுமாறும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். குறிப்பாக இவரது பதிவுகளுக்கும் மற்றும் சமூக வலைதள பக்கங்களையும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்வதால் அவர்கள் இதுபோன்ற இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபட்டால் தண்டணை இருக்கிறது என மற்றவர்களும் தெரிந்துகொள்ளவும் தவறு செய்த ஹரிகரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் அதிகமா? தமிழ்நாடு அரசு விளக்கம்
மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில், கோட்டை சரக போலீசார் தாமாக முன் வந்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவலறிந்தால், போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இச்செயல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டாட்டூ ஸ்டூடியோவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இதுபோன்ற இயற்கைக்கு மாறான விஷயங்கள் தவறான முன்னுதாரணம் என்பது மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கவிடும். சட்டத்துக்கு புறபான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதனை ஒருபோதும் செய்யாதீர்கள். இளம் வயதிலேயே வழக்கு என வாழ்க்கையை தொலைக்க நேரிடும். பள்ளி கல்லூரி காலத்தில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் மட்டுமல்லாது குடும்பமும் சேர்ந்து அவதிக்குள்ளாக நேரிடும்.
(பொறுப்பு துறப்பு : வீடியோவில் இருக்கும் எந்த தகவலுக்கும் ஜீ தமிழ் நியூஸ் பொறுப்பேற்காது. விழிப்புணர்வுக்காக மட்டுமே இங்கு பதிவிடப்பட்டுள்ளது. அந்தந்த சமூக ஊடக கணக்குகளே பொறுப்பு)
மேலும் படிக்க | ஆண்டாள் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது ஏன்? வெளியான அறிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ