நிர்வாண போட்டோ கேட்ட ரசிகர்! பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்!

நிர்வாணப் புகைப்படம் கேட்ட ரசிகர்களுக்கு வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பிரபல நடிகை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2021, 01:56 PM IST
நிர்வாண போட்டோ கேட்ட ரசிகர்! பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்! title=

நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர். பிறகு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்த பூஜா ஹெக்டே (Pooja Hegde) இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' என்ற பாடல் யூடியூப்பில் பெறும் சாதனைப் படைத்தது.

ALSO READ | ''சமந்தா அழகில்லை'': ஹேக் செய்யப்பட்டதா பூஜாவின் இன்ஸ்டா?...

தற்போது இவர் பிரபாஸ் (Prabhas) ஜோடியாக 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தியில், சல்மான் கானுக்கு ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரன்வீர் சிங் ஜோடியாக, ரோகித் ஷெட்டி (Rohit Shetty) இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் அவரிடம் கேட்ட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்தார். அவரிடம் பிகினி புகைப்படங்கள், மேக்கப் இல்லாத புகைப்படங்கள், செல்ஃபி என பல புகைப்படங்களை கேட்டனர். இதில் ஒரு ரசிகர் நிர்வாணப் புகைப்படம் கேட்டிருந்தார். இதற்கு தக்க பதிலடி குடுக்கும் வகையில் நடிகை பூஜா ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்தார்.

தனது கால்களின் புகைப்படத்தை போஸ்ட் செய்துவிட்டு, nange pao என்று குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ | உலகின் வசிகரமான முகம் கொண்ட 100 பெண்கள் பட்டியல்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News