சாத்தியமா: திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் இனி இல்லை!

Last Updated : Oct 13, 2017, 02:11 PM IST
சாத்தியமா: திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் இனி இல்லை! title=

தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.

எனினும், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பிலும் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.  

இதற்கிடையில், நடிகர் விஷால் தற்போது திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

 

 

* நாளை முதல் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்.

* கேன்டீன்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள MRP விலைக்குதான் பொருள்களை விற்க வேண்டும். 

* அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும். 

* திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது. 

* விரைவில் ஆன்லைன் கட்டணமும் குறைக்கப்படும் 

என தெரிவத்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை மீறும் திரையரங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News