‘Don’t Touch’ ஆசையாக பேச வந்த ரசிகையின் செயலால் கோபமான ராதிகா..!

Raadhika Sarathkumar Viral Video: பிரபல நடிகை ராதிகா, திருப்பதிக்கு சென்றிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2023, 11:25 AM IST
  • பிரபல தமிழ் நடிகை ராதிகா சரத்குமார்.
  • திருப்பதிக்கு சென்றிருந்தார்.
  • அங்கு ஒரு ரசிகையின் செயலால் கோபமடைந்துள்ளார்.
‘Don’t Touch’ ஆசையாக பேச வந்த ரசிகையின் செயலால் கோபமான ராதிகா..! title=

நடிகை ராதிகா, சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஒரு ரசிகை செய்த செயல் அவரை கடுப்பாக்கியது. இதுகுறித்த வீடியோ என்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. 

ராதிகா..

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா. பிரபல வில்லன் நடிகர் ராதாரவியின் தங்கை இவர். வெளிநாட்டிற்கு சென்று படித்துவிட்டு திரும்பிய இவர், 1978ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர், இவரைத்தேடி பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இயக்குநர் பாரதிராஜாவிற்கு பிடித்தமான நடிகைகளுள் இவரும் ஒருவர். நடிகர் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டு ராதிகாவும் பிரபல நடிகர் சரத்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 

கடுப்பான ராதிகா…

ராதிகா, சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார். அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு யோயிலில் இருந்து வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை சூழ்ந்த சில ரசிகர்கள் ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது நடுத்தர வயதுடைய ஒரு ரசிகை ஓடி வந்து ராதிகா மீது கை போட்டது போல போஸ் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத ராதிகா, திகைத்து போய் திரும்பி பார்த்து அந்த ரசிகையை முறைத்தார். பின்னர், ராதிகாவிற்கு அருகில் இருந்தவர்கள் அந்த ரசிகையை ‘தொடாதீர்கள்…தொடாதீர்கள்..’ என எச்சரித்தனர். இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் ராதிகாவை விட, அவர் மீது கை போட்ட ரசிகையை விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மீண்டும் தள்ளிப்போகும் எச் வினோத் - கமல்ஹாசன் படம்! இதுதான் காரணமா?

நயன்தாராவின் செயல்..

தமிழ் திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனும் படத்திற்கு சொந்தக்காரர், நயன்தாரா. இவரும் அடிக்கடி திருப்பதி அல்லது வேறு சில கோயில்களுக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி ஒரு முறை சென்றிருந்த போது நயன்தாராவுடன் பலர் போட்டோ எடுக்க வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகை அவரது கையை பிடித்தார். அப்போது நயன்தாரா சற்று எரிச்சலுடன் அந்த ரசிகையின் கையை தட்டிவிட்டார். இது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதே போன்ற செயலை தற்போது ராதிகாவும் செய்துள்ளதால் இவரது செயலையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

வெள்ளித்திரை டூ சின்னத்திரை..

நடிகை ராதிகா, சினிமாவில் நடிப்பதையும் சீரியலில் நடிப்பதையும் கரெக்டாக பேலன்ஸ் செய்து வருகிறார். 70களில் இருந்து 90கள் வரை கதாநாயகியாக நடித்து வந்த இவர், இடையிடையே அம்மா கதாப்பாத்திரம் அல்லது அண்ணி கதாப்பாத்திரம் என படத்தின் கதாநாயகியை தவிர்த்து முக்கியமாக காண்பிக்கப்படும் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு வருவது எல்லாமே அம்மா கதாப்பாத்திரமாக வந்தது. அஜித், விஜய், விஜய் சேதுபதி என தொடங்கி தற்போது சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ள பிரதீப் ரங்கநாதன் வரை பலருக்கு அம்மாவாக நடித்துவிட்டார். அதே சமயத்தில் சின்னத்திரையிலும் ஜொலிக்கும் நடிகையாக உள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி சீரியலுக்கு இன்றளவும் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிக்கும் தாெடர்களில் எல்லாம், இவர்தான் மெயின் கதாப்பாத்திரமாக இருப்பார். சித்தி சீரியலை போல செல்லமே, சந்திரகுமாரி, வாணி-ராணி என இவர் நடித்த தொடர்களின் லிஸ்ட் மட்டும் நீண்டு கொண்டே போகிறது. இவர், தற்போது சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இப்படம், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

மேலும் படிக்க | ‘மாமன்னன்’ படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் யார்..? முழு விவரம் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News