விஜய்யின் வாரிசு படத்தினால் ஏமாற்றமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு!

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 'வாரிசு' படம் வெளியாகும் நிலையில் இப்படத்திற்கு போட்டியாக சில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படமும் களமிறங்கவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 19, 2022, 08:07 AM IST
  • வாரிசு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
  • துணிவு படமும் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.
விஜய்யின் வாரிசு படத்தினால் ஏமாற்றமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு! title=

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக விஜய்யின் 'வாரிசு' படம் உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என உணர்ச்சிகள் நிறைந்த குடும்ப கதையம்சம்சம் கொண்ட திரைப்படத்தில் விஜய் நடிப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்தை காண ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார், இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்கும் என்றும் தமிழ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தலாம் என்றும் தயாரிப்பாளர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்த நிலையில் அவரது எதிர்பார்ப்பில் சில ஏமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் - ரக்ஷிதாவுக்கு இவ்வளவா?

அதாவது படக்குழு ஏற்கனவே 'வாரிசு' படத்தை 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு இருந்தது, பொங்கல் பண்டிகையில் வாரிசு படம் மட்டுமே வெளியாகும் அதனால் பெரிய லாபம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார்.  ஆனால் இப்போது 'வாரிசு' படத்திற்கு போட்டியாக அஜித்தின் 'துணிவு' படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.  இந்த இருவருமே பெரிய நட்சத்திரங்கள் என்பதால் சரிபாதியான திரையரங்குகள் இரண்டு படத்திற்கும் போய்விடும், எதிர்பார்த்த அளவு அதிக திரையரங்குகளில் 'வாரிசு' படம் வெளியாகாது, இதனால் வசூலில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.  தமிழில் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் தெலுங்கிலும் 'வாரிசு' படம் வெளியாகப்போகும் பண்டிகை தினத்தில் சில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களும் களத்தில் போட்டியிட தயாராக இருக்கிறது.

ஏற்கனவே பொங்கல் பண்டிகை தினத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' மற்றும் சிரஞ்சீவி நடிக்கும் 'மெகா 154' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகப்போவதாக கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் மேலும் இரண்டு பெரிய நட்சத்திர படங்களும் சேர்ந்துள்ளது.  நந்தமுரி பாலக்ரிஷ்ணாவின் 'என்பிகே 107' படமும், அகில் அக்கினேனி மற்றும் மம்மூட்டி நடிக்கும் 'அகில்ஸ் ஏஜென்ட்' படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.  இந்த 4 படங்களில் நிச்சயமாக 3 படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த படங்களினால் 'வாரிசு' படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தனது திட்டங்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜு கவலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | புஷ்பா 2: ஹீரோயின் மாற்றம் இல்லையாம்! கொண்டாட்டத்தில் ராஷ்மிகா போட்ட ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News