கெளதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?

கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 02:23 PM IST
  • லாரன்ஸ் பேய் படங்களை வைத்து தான் தமிழில் அதிகமான பேய் படங்கள் களமிறங்க தொடங்கியது.
  • கெளதம் மேனன் அதிகமாக காதல் கலந்த ரொமான்டிக் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?  title=

நடன இயக்குனர் மற்றும் நடிகராக திரையுலகில் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ் (Ragava Lawrence).  முனி, காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.  இவரின் பேய் படங்களை அடிப்படையாக வைத்து தான் தமிழில் அதிகமான பேய் படங்கள் களமிறங்க தொடங்கியது.  இவர் தற்போது கெளதம் மேனன் (Gautha Menon) இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ALSO READ | எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்!

கெளதம் மேனன் அதிகமாக காதல் கலந்த ரொமான்டிக் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியுள்ளார்.  இந்நிலையில் தொடர்ந்து திகிலான கதையம்சத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் தற்போது கெளதம் மேனன் படத்தில் இணைந்துள்ள தகவல் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இயக்குனரான கெளதம் மேனன் தற்போது சில படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். 

'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து இவர் சிம்புவை (Actor Simbu) வைத்து 'வெந்து தணிந்தது காடு' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.  அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதனையடுத்து கெளதம் மேனன் மற்றும் ராகவா லாரன்ஸ் கூட்டணி சேரும் இந்த புதிய படத்தை ஐசரி k கணேஷ் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.  மேலும் இப்படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராகவா லாரன்ஸ் தற்போது 'துர்கா' மற்றும் 'ருத்ரன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஆஸ்காரின் யூடியூப் சேனலில் இடம்பிடித்த சூர்யாவின் 'ஜெய் பீம்'!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News