’வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வருண், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் பிஸியாக இருந்து நடிகர் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 4, 2022, 08:01 PM IST
  • வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
  • சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு
  • பிக்பாஸில் இருந்து வெளியேறிய வருண், சிம்புவுடன் சந்திப்பு
’வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்..! title=

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் "வெந்து தணிந்தது காடு". (Vendhu Thanindhathu Kaadu)  விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

ALSO READ | அதிக வியூஸ் கொண்டு சாதனை படைத்த வெந்து தணிந்தது காடு டீசர்

இப்படத்தில் கயாடு லோஹர், ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சிம்பு (Simbu) தனது உடல் எடையை குறைத்த பிறகு ஈஸ்வரன் மற்றும் மாநாடு போன்ற படங்களில் நடித்தார். அண்மையில் ரிலீஸான ‘மாநாடு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், சிம்புவுக்கும் திருப்புமுனையாக அமைந்தது. மாநாடு திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு பிறகு கவுதம் வாசுதேவ்மேனனுடன் இணைந்த சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாக நடித்தார். ஏற்கனவே படத்தின் பெரும்பாலான சூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என இயக்குநர் கவுதம்மேனன் தெரிவித்திருந்தார்.

ALSO READ | '’வெந்து தணிந்தது காடு’ அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!

அதன்படி, ஜனவரி 3 முதல் சூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிம்பு மற்றும் சித்திட்ஞானியின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து அண்மையில் வெளியேறிய நடிகர் வருண், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று அங்கு சிம்புவை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் கலகலப்பாக உரையாடியதுடன், வெந்து தணிந்து காடு படம் பறிறயும், வருணின் ஜோஸ்வா பற்றியும் பேசிக்கொண்டார்களாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News