சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மாலை 6 மணிக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. மேலும் படத்தின் செகண்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்களுக்கு இடையில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தலைவர் ரஜினி படத்தின் போஸ்டர்கள் (Annaatthe First Look) வெளியானதால், அதுவும் ஒரே நாளில் மூன்று முறை அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதால், ரஜினி (Rajinikanth) ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர்.
ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்
இந்த உற்சாகத்தை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த போஸ்டருக்கு ரத்தத்தால் அபிசேகம் செய்துள்ளனர். அண்ணாத்த படத்தின் போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து, அதன் ரத்தத்தை போஸ்டர் மேல் ஊற்றி அபிசேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் மேற்படி முகவரியில் இருந்து வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன்.
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி சமூக ஆர்வலர்களால் பொதுமக்களால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, இன்றைய தேதிவரை இச்செயலை எதிர்த்து ஒரு கண்டனம், எதிர்ப்பு அறிக்கையோ, விளக்கமோ ரஜினிகாந்த் அவர்கள் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரிப்பது போலவே உள்ளார். இது பொது மக்களுக்கு அச்சத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக்கும்.
மேலும் மிருகவதையும் அடங்கும், கோயில்களில் ஆடு பலி இடுவதே ஓரமாக ஒதுக்குப்புறமாக செய்யும் நாடு, மேலும் கசாப்பு கடையில் கூட மறைவாகதான் ஆட்டை அறுப்பார்கள், ஆனால் இப்படி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கூடியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு கொடூரமான செயலை செய்த மேற்படி நபர்களை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும், இச்செயலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR