தலைவர் 171 படத்திற்காக 250 ரூபாய் சம்பளம் வாங்கும் ரஜினி?

Thalaivar 171: ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரஜினியின் சம்பளம் 250 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Nov 4, 2023, 09:39 PM IST
  • தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த்.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
  • ரஜினி சம்பளம் 100 கோடி என்று கூறப்படுகிறது.
தலைவர் 171 படத்திற்காக 250 ரூபாய் சம்பளம் வாங்கும் ரஜினி?  title=

Thalaivar 171: 2023ம் ஆண்டு ரஜினிக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.  அவர் தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்துள்ளது.  2018 ஆம் ஆண்டு ஷங்கர் - ரஜினி கூட்டணியில் வெளியான 2.0 படத்திற்குப் பிறகு ரஜினி நடித்த படங்கள் சரியான வெற்றியை தரவில்லை.  இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தை தவிர, தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. ஆனால் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் ரஜினிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது.  இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது.  கோலிவுட்டில் அதிக வசூல் செய்த படமாகவும் இருந்து வருகிறது.  சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெய்லர் படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்து இருந்தனர்.

மேலும் படிக்க | லியோ திரைப்படம்: விஜய்க்கு மகனாக நடித்க மாத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

ஜெய்லர் படத்திற்கு பிறகு ரஜினிக்கு அடுத்தடுத்த படங்களும் சிறப்பாக அமைந்தது.  அவரது மகள் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் ரஜினி முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.  இதனை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.  ஞானவேல் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.  இந்நிலையில், இந்த படங்களுக்கு அடுத்து ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 'தலைவர் 171' படம் வெளியாக உள்ளது.  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.  

லியோ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார்.  லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்-ன் ஒருபகுதியாக இருந்த லியோ படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது.  மேலும், தமிழகத்தில் 100 கோடி ஷேர் குடுத்த முதல் தமிழ் படமாக லியோ அமைந்துள்ளது. 
மேலும், கேரளா, ஆந்திரா, ஹிந்தி என்று அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்த படங்களில் லியோ அதிக வசூல் செய்துள்ளது.  மேலும், லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படம் LCUல் வராது என்பதை முன்கூட்டியே கூறி உள்ளார். இந்நிலையில், தலைவர் 171 படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.  தலைவர் 171 படத்திற்காக ரஜினிக்கு 250 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெய்லர் படத்திற்காக ரஜினி 200 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வதந்தி உண்மையாக இருந்தால், ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பே ரஜினி ஜாக்கி சானின் சம்பளத்தை விட அதிக சம்பளம் வாங்கி சாதனை படைத்து இருந்தார்.  ஜெய்லர் படத்தின் வெற்றியை முன்னிட்டு, கலாநிதி மாறன் (சன் பிக்சர்ஸ் உரிமையாளர்) ரஜினிக்கு BMW X7 மற்றும் காசோலை ஒன்றை வழங்கி இருந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் இணைந்த விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா கூட்டணி! தீபாளிக்கு வெளியாகும் ரெய்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News