Trademark சிரிப்புடன் ரஜினி... ரசிகர்கள் ஹேப்பி - போய்ஸ் கார்டனில் புத்தாண்டு சந்திப்பு

Rajinikanth New Year Meet : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு கையசைத்து ரஜினிகாந்த் வாழ்த்துகள் தெரிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 1, 2023, 01:47 PM IST
  • ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி.
  • ரஜினி புத்தாண்டு வாழ்த்து ட்வீட்.
  • சமீபத்தில் அவரின் பாபா படம் ரீ-ரிலீஸ் ஆனது.
Trademark சிரிப்புடன் ரஜினி... ரசிகர்கள் ஹேப்பி - போய்ஸ் கார்டனில் புத்தாண்டு சந்திப்பு  title=

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்ததை அடுத்து, ரஜினி டாக்டர், பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டாக்டர் வெற்றியை நெல்சனுடன் ரஜினி இணைந்ததை கொண்டாடிய ரசிகர்கள், பீஸ்ட் பட தோல்வியை அடுத்து கடுமையாக விமர்சனம் செய்தனர். 

இந்தச் சூழலில், ரஜினி படத்தில் இருந்து நெல்சன் விலக உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியான நிலையில், ரஜினி - நெல்சன் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் சிறப்பு கிளம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க |  தூள் கிளப்பும் துணிவு டிரைலர்... வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

தொடர்ந்து, ஜெயிலர் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினி தனது பிறந்தநாளை முன்னிட்டு, 2002ஆம் ஆண்டு தனது தயாரிப்பில் உருவான பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்தார். படம் எதிர்பார்த்த வசூலை குவிக்காவிட்டாலும் பெரும் பின்னடைவை எதையும் உருவாக்கவில்லை. 

72 வயதிலும் தொடர்ந்து இயங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புத்தாண்டை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதில்,'உன் வாழ்க்கை உன் கையில்' என ஹேஷ்டேக் உடன் பதிவிட்டு, பலரின் புத்தாண்டு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்களை ஆக்கிரமித்துள்ளார். 

நள்ளிரவில் ரஜினி ட்வீட்டால் உந்தப்பட்டு, ரசிகர்கள் இன்று அவரின் வீட்டின் முன் குவிந்தனர். சிறப்பு தினங்களில் ரஜினி வீட்டில் இருப்பார் என்று கூறப்பட்டாலும் பிறந்தநாள் அன்று அவரின் வீட்டின் முன்னால் காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. எத்தனை முறை ஏமாற்றமடைந்தாலும், ரஜினி தரிசனத்திற்காக அவரின் வீட்டின் முன்னால் இன்றும் நூற்றுக்கணக்காணோர் குவிந்தனர். 

இந்நிலையில், வாசலில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு வாழத்து சொல்ல நேரில் வந்த ரஜினி, கூட்டத்திற்கு பிளையிங் கிஸ் கொடுத்தது பார்ப்போரின் மெய் சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து, ரஜினி தனது டிரேட்மார்க் வணக்கத்தையும், சிரிப்பையும் சேர்த்து அள்ளிவீசினார். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | துணிவு ட்ரெய்லர் - ஒரு மணி நேரத்தில் செய்த சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News