ரவுடி பேபி: 71 நாட்களில் 300 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை!

மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூபில் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை.

Last Updated : Mar 14, 2019, 10:42 AM IST
ரவுடி பேபி: 71 நாட்களில் 300 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை! title=

மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூபில் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் "மாரி 2". இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரவுடிபேபி பாடல் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கி வருகிறது. இந்த பாடலின் வீடியோ யூடியூப்பில் தற்போது வரை 300 மில்லியன் பார்வகைளை பெற்றுள்ளது மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் பாடல் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வகைளை பெற்று சாதனையைப் படைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமா பாடல் ஒன்று 300 மில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை.

 

Trending News