ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த RRR!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'RRR' படம் மார்ச்-25ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 06:35 PM IST
  • பாகுபலியை தொடர்ந்து பிரம்மாண்டமாக RRR படத்தை இயக்கும் ராஜமௌலி 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தை எடுத்து உள்ளார்
  • RRR படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
ஒருவழியாக ரிலீஸ் தேதியை அறிவித்த RRR! title=

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'RRR'.  இப்படத்தில் ஜூனியர் NT ராமாராவ், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன் மற்றும் ஸ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் இந்திய புரட்சியாளர்களான 'அல்லூரி சீதாராம ராஜு' மற்றும் 'கொமரம் பீம்' ஆகியோரின் புரட்சி பற்றி புனையப்பட்ட திரைக்கதை ஆகும்.  

ALSO READ | அரைமணி நேர காட்சிக்கு இத்தனை கோடி சம்பளமா?

பாகுபலியை தொடர்ந்து பிரம்மாண்டமாக இந்த படத்தை  இயக்கும் ராஜமௌலி 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தை எடுத்து உள்ளார்.  இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, உக்ரைன், ஹைதராபாத் போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டது.  இந்த படத்தில் சில நிமிட காட்சிகளில் நடித்த அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட்டிற்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்தது.  ஆனால் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலால் திரையரங்குகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக இப்படத்தின் வெளியீடு மீண்டும் 5வது முறையாக தள்ளி வைக்கப்பட்டது.  

 

'வலிமை' படம் தள்ளிபோவதற்கு ரசிகர்கள் எவ்வாறு அதிருப்தி அடைந்தார்களோ அதேபோல இப்படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.  இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'RRR' படம் வரும் மார்ச் 25ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.  சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படமும் மார்ச் 25ம் ரிலீசாகும் என்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பிரம்மாண்ட படமும் அதே தேதியில் வெளியாகப்போகிறது.

ALSO READ | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News