புதுடெல்லி: என்டிஆர் ஜூனியர் உண்மையில் பன்முக திறமை கொண்ட சூப்பர் ஸ்டார் என்பதை தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களும் ரசிகர்களும் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறார்கள். ஏனென்றால் திரைப்படங்களின் வெற்றியுடன், அவர் தனது பாணி மற்றும் தொழில்பக்திக்காக தலைப்புச் செய்திகளில் எப்போதும் இருக்கிறார்.
இப்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து, அனைத்து மொழி மக்களின் இதயங்களையும் ஆளத் தயாராகிவிட்டார் ஜூனியர் என்.டி.ஆர்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான் இண்டியா திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடைபெற்ற ஒரு சம்பவம் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் அறிமுகக் காட்சியைப் பற்றி சொன்ன இயக்குநர், கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது உடலை மாற்றிக் கொள்வதற்காக ஜூனியர் என்.டி.ஆர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக கூறுகிறார்.
ALSO READ | RRR vs Valimai: படத்தின் நீளத்திலேயே தொடங்கிருச்சு Fight!
சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள் இதற்காக செலவிட்ட ஜூனியர் என்டிஆர், இயற்கையாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பல்கேரியாவின் காட்டில் காலணி இல்லாமல் ஓடி பயிற்சி செய்திருக்கிறார்.
ஆனால், ஷீட்டிங்கின்போது, ஷூ அணிந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் நடிகர். ஆனால் காட்சி ஒத்திகையின் போது, ஷூ போட்டிருந்தாலும், அறிமுகக் காட்சியின் படப்பிடிப்ப்பு நடைபெற்றபோது பல்கேரியாவின் முட்கள் நிறைந்த காட்டில் வெறுங்காலுடன் ஓடும்படி கிரியேட்டிவ் பவர் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ராஜமௌலி அறிவுறுத்தினார்.
என்டிஆர் ஜூனியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், காட்டின் முட்கள் மற்றும் கூர்மையான கற்கள் அவரது கால்களில் குத்தின.
ALSO READ | RRR ரிலீஸ் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த செய்தி வெளியாகி, ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், நடிகர் அங்கு ஓடி பயிற்சி செய்வதற்கு முன்னதாக, காட்டில் ஓடி பழக்கமான தொழில்முறை பணியாளரை வைத்து சோதித்து பார்த்திருக்கிறர்கள். அதேபோல, நடிகர் ஓடும்போது, அவருக்கு இணையாக கேமராமேனும் ஓடியிருக்கிறார்.
பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் திரைப்படம் (RRR Movie), ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
5 மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.
ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR