என் மீது வதந்திகள் பரப்பப்பட்டன - சமந்தா!

இக்கட்டான காலத்தில் துணைநின்று, தன்னை பற்றி பரப்பப்பட்ட வதந்திகளை நம்பாமல் தன் பக்கம் நின்றதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமந்தா பதிவிட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 8, 2021, 04:54 PM IST
  • இருதரப்பிலும் இந்த பிரிவிற்கான காரணம் எதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை.
  • னக்கு தவறான உறவு இருந்தது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்தேன் என்றும் நிறைய பரப்பப்பட்டன.
என் மீது வதந்திகள் பரப்பப்பட்டன - சமந்தா!

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாக்கு இருவரும் தங்களது திருமண வாழ்வை முறித்து கொண்ட  விஷயம் அனைவரும் அறிந்ததே. அதேசமயம் இருதரப்பிலும் இந்த பிரிவிற்கான காரணம் எதுவும் முழுமையாக சொல்லப்படவில்லை.  ஆனால் இந்த விவகாரத்தை தொடர்பாக பல்வேறு செய்திகள் உலா வந்தன, அதை எந்த தரப்பினரும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

ALSO READ ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுத்த சமந்தா

இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பாக இதுநாள் வரையில் மவுனம் காத்து வந்த சமந்தா முதன்முறையாக தனது விவாகரத்து தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.  எனக்கு ஏற்பட்ட மிகவும் நெருக்கடியான நேரத்தில் நீங்கள் காட்டிய அன்புக்கும், அக்கறைக்கும், பரப்பப்பட்ட வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் நம்பாமல் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி.   எனக்கு தவறான உறவு இருந்தது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி, கருக்கலைப்பு செய்தேன் என்றும் நிறைய பரப்பப்பட்டன.

sam

விவாகரத்து என்பது மிகவும் வேதனையான விஷயம். நேரம் இந்த ரணத்தை குணப்படுத்த எனக்கு உதவியது.  என் மீது தனிப்பட்ட முறையில் இடைவிடாத தாக்குதல் தொடர்ந்தது.  ஆனால் நான் ஒரு போதும் அதைக் கண்டு கலங்கி, உடைந்து போக மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இது நடிகை சமந்தாவின் இந்த பதிவிற்கு நடிகை ராகுல் பிரீத் சிங் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  ரசிகர்களும் தங்களது ஆதரவை சமந்தாவிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

 

ALSO READ சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து செய்யவதாக அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News