எஸ். பி. பாலசுப்பிரமணியம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 60ஸ் கிட்ஸ் தொடங்கி புத்தாயிரத்தில் பிறந்த 2கே கிட்ஸ் ஏன் இன்று பதின்பருவத்தில் இருக்கும் 2.1கே கிட்ஸ் (2010களில் தம் சிறார் பருவத்தைக் கழித்தவர்கள்) வரை அவரைத் தம்முடைய மனம் கவர்ந்த பாடகர்களில் முதன்மையானவராகக் கருதுகிறார்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் முக்கியமாக முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் எ .ஆர் ரஹ்மான் இசையில் பல பாடலை பாடியுள்ளார்.
காதல், பாசம், அன்பு, நட்பு, பரிவு, ஏக்கம், கவலை, துக்கம், அழுகை, கோபம், ஆவேசம், வீரம், சாகசம் என அவர் குரல் வழியே வெளிப்பட்ட மனித உணர்ச்சிகள் அற்புதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பெண்களுக்கு மிகப் பிடித்தமான ஆண் குரலாகவும் அவருடைய குரலே இருந்து வருகிறது.
மேலும் படிக்க | என்னது தல போய் கேட்டும் நோ சொல்லிட்டாரா விஜய்
ரஜினிகாந்த் தமிழ் தல அஜித் ஆகியோருக்கு எப்போதும் இன்ட்ரோ பாடல் எஸ் பி பி குரலில் மட்டும்தான். எஸ்பிபி குரலில் இன்டோ பாட்டு என்பது ஒரு ட்ரெண்ட் செட்டிங். பல ஆக்சன் படங்களில் இவரின் பின்னணி பாடல் தான் கதாநாயகர்களுக்கு பின்பலமாக உள்ளது.
சகலகலா வல்லவன் படத்துக்குப் பிறகு தமிழனின் ஒவ்வொரு புத்தாண்டும் எஸ்.பி.பியின் இளமையும் இனிமையும் என்றும் குறையாத "ஹேப்பி நியூ இயர்" பாடலுடன்தான் தொடங்குகிறது . நமது அனைத்து உணர்வுகளுக்கும் பாடல் வடிவம் கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
அவர் இசையமைத்து நடித்த சிகரம் படத்தின் "இதோ இதோ என் பல்லவி" பாடலில் வரும் வரிகளைப் போலவே, பாடல் பாட வந்து நம் பாடலாகவே மாறிப்போனவர் பாலு . ஏழு ஸ்வரங்களையும் உள்ளடக்கிய எட்டாவது ஸ்வரம் எஸ்.பி.பி. இவரின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் அவரது குழந்தை முகமும் கருணை கண்களும் தான் ஞாபகம் வரும்.
மேடைகளில் மட்டுமல்லாமல் பாலு ஏற்று நடித்த பாத்திரங்களிலும் அவரது குழந்தை மனதையும், நகைச்சுவை உணர்வையும் அவரிடம் உணரலாம். அவ்வை சண்முகி படத்தில் எஸ் பி பி டாக்டர் பாத்திரத்தை சிறந்த உதாரணமாக சொல்லலாம். காரிலிருந்து இறங்கி, குழந்தையை சோதித்து முடிக்கும்வரை அனைத்து பாத்திரங்களின் பேச்சையும் கேள்விகளையும் ஹாஸ்யமாக்கி, தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்.
வயது, இமேஜ் இது பற்றி பெரிதும் கவலைப்படாமல், தன் வயதுக்கும் மீறிய பாத்திரங்களில் சிவாஜி முன்பே நடித்து விட்டார். ‘வியட்நாம் வீடு’ ஒரு நல்ல உதாரணம். பாலுமகேந்திரா இயக்கிய ‘வீடு’ திரைப்படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதரைத்தான் ஒருவகையில் அந்தப் படத்தின் ‘ஹீரோ’ எனலாம். மணிவண்ணன் இயக்கிய ‘இனி ஒரு சுதந்திரம்’ திரைப்படத்தில் வயதான கிழவராக நடித்த சிவகுமார்தான் ஹீரோ. பார்த்திபனின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த ‘ஹவுஸ்புல்’ திரைப்படமும் கிழவர் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.
சினிமா விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேட்டிகள் என அவரது பேச்சுக்களில் அனைத்திலும் ஒரு உள்ளார்ந்த நேசம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ