சாய்பல்லவி மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் - பின்னணி இதுதான்

காஷ்மீர் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் இப்போது தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சாய்பல்லவி கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 15, 2022, 04:13 PM IST
  • சாய்பல்லவி மீது கடும் விமர்சனம்
  • காஷ்மீர் படுகொலை குறித்து கருத்து கூறியிருந்தார்
  • வலதுசாரி அமைப்பினர் கண்டனம்
சாய்பல்லவி மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் - பின்னணி இதுதான் title=

வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ’விராட பருவம்’. ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சாய்பல்லவி மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர். இந்தப் படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. டி சுரேஷ் பாபு இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்துக்காக தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் புரோமோஷன் நிகழ்வில் சாய்பல்லவி பங்கேற்றிருக்கிறார். தற்போது ஒரு யூடியூப் சேனலில் படத்தின் புரோமோஷனுக்காக பேசிய பேச்சு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜைவிட அதிக சம்பளம் வாங்கும் நெல்சன் திலீப்குமார்

அந்தப் பேட்டியில், காஷ்மீர் இனப்படுகொலைக்கும், தற்போது பசுக்களுக்காக மனிதர்களை அடிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்வி தான் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. அவர் பேசும்போது, ‘வன்முறை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. வன்முறை மூலம் சாதிக்க முடியும் என நான் நம்பவில்லை. ஒரு குடும்பத்தில் யார் சரி? யார் தவறு? என்று சொல்வது கடினம். முடிந்தவரை யாரையும் காயப்படுதாமல் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். 

'சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் காஷ்மீரி பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவற்றை மத மோதல்களாகவே பார்க்கிறோம். சில நாட்களுக்கு முன் ஒரு மாடு, வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டது. டிரைவர் ஒரு முஸ்லிம். சிலர் அவரை அடித்து, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்புமாறு மிரட்டினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மதங்களைக் கடந்து நாம் மனிதர்களாக இருக்க வேண்டும். இடது சாரி அல்லது வலதுசாரி என யாராக இருந்தாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இதனை சர்ச்சையாக உருவாக்கியுள்ள சிலர், காஷ்மீர் படுகொலையை கொச்சைப்படுத்துவதாக சாய்பல்லவியை விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 'தலைவர் 169' அப்டேட்டை வெளியிட்ட ரெடின் கிங்ஸ்லீ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News