கொளுத்தி போட்ட புவனேஷ்வரி.. ட்விஸ்ட் கொடுத்த ரகுராம்: சந்தியா ராகம்

சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்: கொளுத்தி போட்ட புவனேஷ்வரி.. ட்விஸ்ட் கொடுத்த ரகுராம் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2023, 02:52 PM IST
  • மாயா குளத்தில் மூழ்கி விட்டு எழுந்து வர ஜானகி, திதி கொடுக்க உட்கார சொல்கிறாள்.
  • சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • ரகுராம் குளத்தில் மூழ்கி எழுந்து வந்து உட்கார்ந்து திதி கொடுக்கிறார்.
கொளுத்தி போட்ட புவனேஷ்வரி.. ட்விஸ்ட் கொடுத்த ரகுராம்:  சந்தியா ராகம் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாயாவுக்கு போதை தெரிய வைத்து சந்தியாவுக்கு திதி கொடுக்க ஜானகி ஏற்பாடு செய்திருந்த நிலையில் புவனேஸ்வரி ரகுராமிடம் இந்த விஷயத்தை கொளுத்தி போட அவர் கோபமாக குளத்தங்கரைக்கு கிளம்பினார். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது மாயா குளத்தில் மூழ்கி விட்டு எழுந்து வர ஜானகி அவள் மீது துண்டை போட்டு திதி கொடுக்க உட்கார சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து ரகுராம் டென்ஷனாக இங்கு வந்து பெண்கள் திதி கொடுக்கக் கூடாது உனக்கு தெரியாதா என ஜானகியிடம் சத்தம் போடுகிறார். 

மாயா எங்க அம்மாவோட ஆத்மா சாந்தியடையும் அதுக்காக நான் திதி கொடுப்பேன் என்ன விட்டா எங்க அம்மாவுக்கு வேற யாரு திதி கொடுப்பா என்று கேட்க ரகுராம் நான் கொடுக்கிறேன் என்று சொல்லி துண்டை வாங்கிக் கொண்டு சென்று குளத்தில் மூழ்கி எழுந்து வந்து உட்கார்ந்து திதி கொடுக்கிறார். 

மேலும் படிக்க | ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?

கொடுத்து முடித்த பிறகு கிஷோர் இல்லை என்ற காரணத்தினால் நான் திதி கொடுக்க வேண்டியதுதான் போச்சு அதற்கு காரணம் சந்தியாவுக்கு யாரும் இல்ல அவரு அனாதை என்பதால் தான் என்று சொல்ல மாயா இதைக் கேட்டு கோபத்தோடு வீட்டிற்கு வந்து விடுகிறாள். 

பிறகு ரகுராம் சட்டை இல்லாமல் வீட்டிற்கு நடந்து வந்து கிணற்றின் அருகே சென்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்ள எல்லோரும் அங்கு கூடி விடுகின்றனர். ஜானகி பத்மாவிடம் டவல் எடுத்து வந்து கொடுக்க சொல்கிறாள். அவளின் எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிய ரகுராம் கோபப்பட்டு தூக்கி வீச அது மாயாவின் முகத்தில் போய் விழுகிறது. 

இன்னைக்கு நடந்த எல்லாத்துக்கும் காரணம் இவ இந்த வீட்ல இருப்பது தான் என மாயாவை குற்றம் சாட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: “ஐஷூ வெளியேறிதற்கு காரணம் இதுதான்..” நிக்ஸன் சொன்ன சர்ச்சை கருத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News