சத்யராஜ் நடிக்கும் புதிய டார்க் காமெடி படம்! ஹீரோ யார் தெரியுமா?

Sathyaraj New Movie: நடிகர் சத்யராஜ், வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய டார்க் காமெடி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jan 3, 2024, 05:23 PM IST
  • தமிழ் சினிமாவின் நக்கல் நாயகன், சத்யராஜ்.
  • இவர், புதிதாக டார்க் காமெடி படத்தில் நடிக்கிறார்.
  • இந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?
சத்யராஜ் நடிக்கும் புதிய டார்க் காமெடி படம்! ஹீரோ யார் தெரியுமா?  title=

தமிழ் சினிமாவின் ‘நக்கல்’ நடிகர்களின் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர், சத்யராஜ். இவர், தற்போது பல இளம் ஹீரோக்களின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஒரு டார்க் காமெடி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Actor Vetri

மேலும் படிக்க | வெளிநாட்டு ரசிகையுடன் நடனமாடும் அஜித்குமார்! வீடியோ இதோ..

ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

இப்படத்தின் கதாநாயகன் வெற்றி, ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் வகையிலான சில படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 8 தோட்டாக்கள், வானம், ஜீவி மற்றும் ஜீவி 2 உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த புதிய படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி..! ஷாக்கான நடிகை..நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News