சீதா ராமன் அப்டேட்: சீதாவை சுற்றி வளைத்த ராம்.. அர்ச்சனாவை கொல்ல வந்தது யார்?

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2024, 02:00 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • தூங்காமல் காவல் கிடக்கும் ராம்.
  • சீதாவை பின்டொடரும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: சீதாவை சுற்றி வளைத்த ராம்.. அர்ச்சனாவை கொல்ல வந்தது யார்? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ், அர்ச்சனா என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை கொல்ல சதிவேலை நடந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

தூங்காமல் காவல் கிடக்கும் ராம்

அதாவது எதிரிகளின் டீமின் அடுத்த குறி சேதுவாக இருக்கலாம் என்று ராம் இரவெல்லாம் தூங்காமல் வீட்டுக்கு வெளியே காவல் கிடக்கிறான், அடிக்கடி சேதுவின் ரூமுக்குள் வந்து கவனித்து கொள்ள சீதா யாருக்கும் தெரியாமல் நடு இரவில் கையில் ஒரு பேக்குடன் வெளியே செல்கிறாள். 

சீதாவை பின்டொடரும் ராம்

இதனை கவனித்த ராம் அவளை பின்தொடர்ந்து செல்கிறான், ஓரிடத்தில் சீதா யாரையோ ஒருவரை சந்தித்து அவரிடம் இந்த பையை கை மாற்ற ராம் இவர்களை சுற்றி வளைக்கிறான், அந்த பேக்கில் என்ன இருக்கிறது என்று கான்ஸ்டபிளை விட்டு செக் செய்ய பழம், பூ என பூஜைக்கு தேவையான பொருட்கள் மட்டும் தான் இருக்கின்றன. 

மேலும் படிக்க | தனுஷ்-அனிருத் நட்பில் விரிசல்!? காரணம் இதுதான்!

இருப்பினும் வீட்டிற்கு வந்த ராம் சீதாவை வளைத்து வளைத்து சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறான், இறுதியாக ராம், சீதா ரூமுக்குள் இருக்கும் போது சீதா நம்பிக்கை என்பது கூட இருக்கவங்கள மேல இருக்கனும் பாஸ், ஆதாரங்கள் மேலயும் கை ரேகை மேலயும் இருக்க கூடாது என கண்ணீருடன் பேசுகிறாள். 

மேலும் உங்க அம்மா தான் என் வயிற்றில் குழந்தையாக வந்து பிறக்க போறாங்க என்று கண்ணீருடன் சொல்ல ராமும் எமோஷன் ஆகிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News