அடுத்தடுத்த திருப்பங்களுடன் மாரி சீரியல்! இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil Serial: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பார்வதி மாரிக்கு போன் செய்து தனது சொத்துக்களை மரியா பெயரில் மாற்றி எழுத போவதாக சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Feb 7, 2024, 01:08 PM IST
  • மரியா பிளானை தடுக்க சூர்யா எடுத்த முடிவு.
  • அடுத்து நடக்க போவது என்ன?
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
அடுத்தடுத்த திருப்பங்களுடன் மாரி சீரியல்! இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பார்வதி மாரிக்கு போன் செய்து தனது சொத்துக்களை மரியா பெயரில் மாற்றி எழுத போவதாக சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, மாரி இந்த விஷயத்தை சூர்யாவிடம் சொல்ல அவன் இதை நடக்க விட கூடாது, அந்த மரியா பார்வதி அம்மாவோட உண்மையான பொன்னே கிடையாது என்று சொல்ல மாரி என்ன சொல்றீங்க என்று கேட்க ஆமாம், நான் இப்போ யார் அவங்க பொண்ணுன்னுல சொல்ல முடியாது என்று வீட்டிற்கு கிளம்பி வருகிறான். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினியினிடம் உள்ள சொத்துகள் எவ்வளவு தெரியுமா?

 

இங்கே மாரி தேவி போட்டோ முன்பு நின்று ஹஸ்பண்ட் சார் என்னமோ சொல்றாரு, நீங்க தான் இந்த பிரச்னையை தீர்த்து வைக்கணும் என வேண்ட போட்டோவில் இருந்து ஒரு பூ கீழே விழ மாரி நீங்க என்னமோ சொல்ல வரீங்க, என்னனு தான் புரியல. கண்டிப்பா இதுக்கு ஒரு தீர்வு கொடுப்பீங்கனு நம்புறேன் என்று சொல்கிறாள்.  அடுத்ததாக பார்வதியை சந்தித்து சொத்துக்களை உடனே மரியா பெயரில் மாற்றி எழுதணும்னு என்ன அவசரம் பொறுமையா பண்ணலாமே என்று சொல்ல தாரா பிளான் போட்டு சூர்யா சொல்றது சரி தான், இந்த விஷயத்தை தள்ளி போடலாம் என்று டிராமா போட மரியா உடனே இதுக்கு தான் எனக்கு சொத்தெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் என்று பார்வதியிடம் அழுது ட்ராமா போடுகிறாள். 

maari

உடனே பார்வதி யார் என்ன சொன்னாலும் பிளான் பண்ண மாதிரி நாளைக்கு சொத்துக்களை உன் பெயருக்கு ரெஜிஸ்டர் பண்ண தான் போறேன் என்று சொல்ல சூரியாவும் சரிங்கமா உங்க விருப்பப்படியே நடக்கட்டும் என்று வெளியே வர மரியா அவனை வழி மறித்து என்னை பிளானை கெடுக்கலாம்னு பார்த்தியா என்று வம்பிழுக்க சூர்யா இப்பவும் சொல்றேன், இந்த ரெஜிஸ்ட்ரேஷனை நடக்க விட மாட்டேன் என்று சவால் விட்டு செல்கிறான். 

மரியா இந்த விஷயத்தை தாராவிடம் சொல்ல அவள் சங்கரபாண்டியை அனுப்பி சூர்யாவின் நடவடிக்கைகளை கவனிக்க சொல்கிறாள். விக்ரமை பார்க்க வந்த சூர்யா என்ன செய்வது என யோசித்து ஒரு ஜோடியை அனுப்பி மரியா எங்களோட பொண்ணு என சொல்ல வைக்க பிளான் போடுகிறான், சங்கரபாண்டி இந்த விஷயத்தை தாராவுக்கு தெரிய படுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News