சீதா ராமன் அப்டேட்: அர்ச்சனாவுக்கு மகா மீது சந்தேகம்.. வெளிவருமா உண்மைகள்?

Seetha Raman Today's Episode Update: மகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்.. தெரிய வந்த உண்மைகள் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2023, 11:58 AM IST
  • மகாவுக்கு அதிர்ச்சி.
  • மகா மீது சந்தேகப்படும் அர்ச்சனா.
  • இரவில் திடீரென விழிக்கும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: அர்ச்சனாவுக்கு மகா மீது சந்தேகம்.. வெளிவருமா உண்மைகள்?  title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலில் கடந்த வார வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு வந்த ராமிடம் மகா டிராமா போட்டு மயங்கி விழுவது போல நடிக்க மதுமிதாவும் சீதாவும் மகாவுக்கு எதிராக கூட்டணி அமைத்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மகாவுக்கு அதிர்ச்சி

அதாவது, ஸ்டேஷனுக்கு வரும் மகா இன்ஸ்பெக்ட்டரிடம் எப்படி நீங்க அவங்களை கைது பண்ணலாம், நான் கோர்ட்க்கு போறேன் என ஆவேசப்பட போலீஸ் அவர்கள் இருவரும் கஞ்சா வைத்தது பற்றி பேசிய வீடியோவை காட்ட மகா அதிர்ச்சி அடைகிறாள். அதோடு இல்லாமல் உங்க ஆபிஸ்ல ஏசி இருக்க இடத்துல தான் கேமரா செட் பண்ணி இருக்க மாதிரி இருக்கு என்று சொல்ல மகாவுக்கு துரை மீது சந்தேகம் வருகிறது. 

மகா மீது சந்தேகப்படும் அர்ச்சனா

ஆபிஸ் வந்து ஏசி இருக்கும் இடத்தில செக் செய்ய ரகசிய கேமரா இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.

இதனையடுத்து வீட்டுக்கு வரும் மகா பயங்கர கோபத்துடன் துரையை கத்தியால் குத்த வர அர்ச்சனா அவரை கொல்ல வேண்டாம், வீட்டை விட்டு வெளியே அனுப்பு என்று சொல்ல துரை மகா என்னை வெளியே அனுப்ப மாட்டா என்று சொல்ல மகா குறித்த ரகசியம் ஏதோ இருக்கு என்று அர்ச்சனாவுக்கு சந்தேகம் வருகிறது. 

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இரவில் திடீரென விழிக்கும் ராம்

அதன் பிறகு ராமின் தங்கைகள் அப்பாவை நினைத்து சாப்பிடாமல் இருக்க மகா அவர்களை சமாதானம் செய்கிறாள்.

மறுபக்கம் ரூமில் தூங்கி கொண்டிருக்கும் ராம் திடீரென எழுந்து கொள்ள சீதா என்ன பாஸ் ஆச்சு என்று கேட்கிறாள், மேலும் நான் இல்லாத போது நீங்க இதே இடத்துல தான் பாட்டு பாடுனீங்க என்று சொல்ல அது எப்படி உனக்கு தெரியும் என்று கேள்வி கேட்கிறான். 

பாட்டு பாடும் ராம்

அதெல்லாம் அப்படி தான், எனக்காக திரும்பவும் அந்த பாட்டை பாடுங்க பாஸ் என்று சீதா கேட்க ராம் பாட இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்கும் மகாவுக்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் தோனி! அதுவும் இந்த படத்திலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News