சீதா ராமன் அப்டேட்: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா

Seetha Raman Today's Episode Update: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2023, 10:52 AM IST
  • சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?
  • சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
சீதா ராமன் அப்டேட்: ராமுக்கு சீதா செய்த சத்தியம்.. கண் கலங்கி நிற்கும் மதுமிதா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சீதா வீட்டை விட்டு வெளியே போன நிலையில் மகா சந்தோஷத்தில் இருக்கிறாள். பிறகு தங்கைகள் மதுவை சாப்பிட கூப்பிட அவள் எனக்கு வேண்டாம் என்று சொல்ல பிறகு ராமை கூப்பிட அவனும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல மகா மதுவை சாப்பிட்டு நீயும் வா என அழைக்க ராம் எங்களுக்கு பசி இல்லை என்று சொல்ல துரை சீதா இப்படி வெளியே நிக்கும் போது எங்களால் எப்படி சாப்பிட முடியும் என்று கேட்கிறான், 

உடனே அர்ச்சனா இவர்களையும் வெளியே அனுப்பிடணும் என்று பேச துரை மகாவால் என்னை அப்படியெல்லாம் வெளியே அனுப்ப முடியாது என்று நக்கல் அடிக்க மகா அண்ணனாக இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் எல்லாத்தையும் பொறுத்துக்க முடியும் என கோபப்பட்டு செல்கிறாள். 

அதன் பிறகு துரை நீ சீதாவை கூட்டிட்டு போய் வீட்ல விட்டு வா என்று சொல்ல அவனும் சீதாவிடம் சென்று வா உன்னை வீட்ல விட்டு வரேன் என்று கூப்பிட அவள் வேண்டாம் அப்பா அம்மா கிட்ட உங்களுக்கு மரியாதை இருக்காது, நானே போயிடுறேன். ஆனால் இப்போ போக முடியாது, இன்னைக்கு நைட் மட்டும் இங்க தங்கி இருந்திட்டு நாளைக்கு காலையில் கிளம்பி போயிடுறேன் என சத்தியம் செய்ய மீராவும் துரையும் சீதாவுக்கு சப்போர்ட் செய்ய ராம் உள்ளே அழைத்து செல்கிறான். மகா நாளைக்கு காலையில் கிளம்பி போய்டணும், உனக்கு நம்பிக்கை இருந்தா அவ இன்னைக்கு நைட் தங்கிக்கட்டும் என அனுமதி கொடுக்கிறாள்.

மேலும் படிக்க | Maamannan Video Review: கட்சியினருக்கே அட்வைஸ் கொடுக்கும் உதயநிதி!

மறுநாள் காலையில் சீதா மதுவிடம் சென்று நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன், இனிமே எல்லாம் சரியாகிடும், எனக்கு பாஸை ரொம்ப பிடிக்கும், அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.. அதை விட அவருக்கு மகா மேல இருக்கிற மரியாதை ரொம்ப முக்கியம் என்று சொல்ல மது இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற என்று கேள்வி கேட்கிறாள். 

பிறகு சீதா நான் ஸ்கூல் போகும் போது நீ என் கையை பிடிச்சி தான் கூட்டிட்டு போவ, அதே போல் இப்பயும் ஒரு முறை என் கையை பிடிச்சிக்குறியா அக்கா என்று கேட்க மதுவும் கையை பிடித்து கொள்ள பிறகு இருவரும் கட்டி பிடித்து அழுகின்றனர். அதோடு ஒரு பாட்டோடு சீதா மதுவுக்கு பாய் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | விஜய் சொல்லியும் கேட்காத மகன் சஞ்சய்! காரணம் இதுவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News