விரைவில் பையா 2! படத்தில் ஆர்யா இல்லை, மீண்டும் கார்த்தியே ஹீரோ

முன்னதாக ‘பையா 2’ படத்தில் ஆர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 5, 2023, 06:45 PM IST
  • பையா 2 படத்தில் இணையும் நடிகர் கார்த்தி.
  • ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.
விரைவில் பையா 2! படத்தில் ஆர்யா இல்லை, மீண்டும் கார்த்தியே ஹீரோ title=

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பையா'. தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி அங்கும் படம் நல்ல வெற்றியினை கண்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த வைபை ஏற்படுத்தி வருகிறது. எதார்த்தமான கதைக்களத்துடன் அமைந்த இந்த படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. வழக்கமான கதை தான் என்றாலும் இப்படம் போர் அடிக்காமல் ரசிக்கும்படி அமைந்திருந்தது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். கார்த்தியின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு சிறப்பான படமாக அமைந்திருந்தது, அதேபோல இயக்குனர் லிங்குசாமிக்கும் இந்த படம் பெரும் புகழை பெற்றுத்தந்தது.

ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் அந்த படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது சில திருத்தத்தங்களை செய்து படத்தின் அடுத்த பாகம் உருவாக்கப்படும். இந்நிலையில் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'பையா-2' படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா அல்லது முற்றிலும் வேறுபட்ட கதைக்களமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னதாக இந்தப் படத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றும் ஆர்யா நாயகனாக களமிறங்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவலை அப்போது ஜான்வியின் தந்தை போனிகபூர் மறுத்திருந்தார்.

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புதல் அளித்துள்ளதால் அவரே 'பையா-2' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், முதல் பாகத்திற்கு இசையமைத்து சிறப்பான பாடல்களை கொடுத்திருந்த யுவன் சங்கர் ராஜாவே இரண்டாவது பாகத்திலும் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் கார்த்தியின் 28வது படமாக அமையும் என்றும் 'பையா-2' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கார்த்தி இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், தமன்னாவும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

paiyaa

'பையா' படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியினை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரியளவில் ரசிகர்களால் பாராட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் சோனியா தீப்தி, ஜெகன், மிலிண்ட் சோமன், தர்ஷன் ஜரிவாலா, ஜாஸ்பெர் போன்ற பலர் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | Vaibhavi Upadhyay: விபத்தில் உயிரிழந்த தீபிகா படுகோன் பட நடிகை..அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News