பிரபல சீரியல் ஜோடியின் நிச்சயதார்த்தம்! கலக்கல் வீடியோ வைரல்!

பிரபல சின்னத்திரை பிரபலங்களான நவீன் - கண்மணியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 15, 2022, 09:17 PM IST
  • நவீனுக்கும், கண்மணிக்கும் இன்று நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது.
பிரபல சீரியல் ஜோடியின் நிச்சயதார்த்தம்! கலக்கல் வீடியோ வைரல்! title=

இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நாயகன் நவீனுக்கும், முன்னணி தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான கண்மணி மனோகரனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. 

இவர்கள் இருவரும் ஏற்கெனவே தங்களது திருமணம் குறித்து அறிவித்து இருந்த நிலையில் இன்று அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

ஒருபுறம் கிராம பின்னணியில் இருந்து சொந்த முயற்சியில் வெளியே வந்த கண்மணி தனது தமிழ் உச்சரிப்பால் பிரபலமடைந்திருந்தார்.

மறுபுறம் இதயத்தை திருடாதே சீரியலில் நவீன் தன்னுடன் இணைந்து நடித்த கதாநாயகியை திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமிருந்தது.

மேலும் படிக்க | திருமணத்தில் தோழிகள் செய்த வேலையால் தேம்பித் தேம்பி அழுத மணப்பெண் 

ஆனால் அவர் கண்மணிதான் தன் எதிர்கால மணைவி, தனது ஆறுருயிர் காதலி என்று தனது ஸ்டேடஸ் மூலம் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

 

பின்னர் இருவரும் நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றனர். அதிலிலும் நவீன் கண்மணியிடம் பிரபோஸ் செய்யும் வீடியோ மிகவும் வைரல் ஆனது.

 

பின்னர் இவர்களின் ஜோடிக்கென பல ஃபேன் பேஜ்கள் உருவாகின. இவ்வாறு அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இவர்கள் வலம் வந்தனர்.

இந்நிலையில், பெரியோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் முன்னிலையில் இன்று சிறப்பாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க | முகத்தில் புன்னகை பூக்கவைக்கும் மணமக்களின் கியூட் சண்டை: வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News