தன்னைவிட 4 வயது இளைய நடிகரை திருமணம் முடித்த இளம் நடிகை

பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் கிஷோர், தன்னை விட நான்கு வயது மூத்தவரான சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை திருமணம் செய்துகொண்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 23, 2023, 04:04 PM IST
  • இவர்களின் திருமணம் சென்னையில் நடந்துள்ளது.
  • திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது.
தன்னைவிட 4 வயது இளைய நடிகரை திருமணம் முடித்த இளம் நடிகை

பிரபல சின்னத்திரை தொடரான 'வானத்தைப் போல’ மூலம் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ப்ரீத்தி குமார், பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் திருமணம் செய்து கொண்டார். தனது திருமணப் புகைப்படத்தை ப்ரீத்தி குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இன்ஸ்டாவில் ஸ்டோரி

இந்த ஜோடி ஒன்றாக கைகளை பிடித்து நிற்கும் புகைப்படம் இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டாரியில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு, தலைப்பிட்டு, “கதை தொடங்குகிறது. #Married" என குறிப்பிட்டுள்ளார். இந்த புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சின்னத்திரை நடிகர்களும், இவர்களது நண்பர்களும் இணையத்தில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

மேலும் படிக்க | லவ் ஜிகாத் செய்யப்பட்டாரா மணிமேகலை? ’உருப்புடற வழிய பாருங்க’ டிவிட்டரில் கொடுத்த தரமான பதிலடி

ப்ரீத்தி மற்றும் கிஷோரின் திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் கலந்து கொண்டனர். திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில், கிஷோர், ப்ரீத்தியை விட நான்கு வயது இளையவர் என்று கூறப்படுகிறது.

ப்ரீத்தி குமார் கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், லக்ஷ்மி வந்தாச்சு, வள்ளி, நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் வானத்தைப் போல உள்ளிட்ட பிரபலமான தமிழ் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஈரமண ரோஜாவே சீசன் 2இல் முன்னணி பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் திரவியம் ராஜகுமாரன், கேப்ரியல்லா சார்ல்டன் மற்றும் சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கிஷோர் குழந்தை நட்சத்திரமாக 'பசங்க' திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பிரபலமானார். அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் அதில் நடித்தார். பசங்க படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர், கிஷோர் வஜ்ரம், நெடுஞ்சாலை, 6 அதிசயம், ஹவுஸ் ஓனர் போன்ற படங்களில் நடித்தார்.

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் படத்துக்கு திடீரென வந்த சிக்கல்- பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News