ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் இயக்கும் லோகேஷ்..? அவரே கொடுத்த அப்டேட்..!

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவின் திறமைமிகு இயக்குநர்களுள் ஒருவராக இருபவர், லோகேஷ் கனகராஜ். இவர், தான் இயக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 19, 2023, 05:59 PM IST
  • லோகேஷ் கனகராஜ் 10 படங்களுக்கு பின்னர் திரையுலகை விட்டு விலகுவதை கன்ஃபார்ம் செய்துள்ளார்.
  • சூர்யா, ரஜினி, அஜித்தை வைத்து படம் இயக்குகிறாரா..?
  • அவரே சொன்ன தகவல்.
ரஜினி, அஜித், சூர்யாவை வைத்து படம் இயக்கும் லோகேஷ்..? அவரே கொடுத்த அப்டேட்..! title=

திரையுலகிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். 5 படங்களுக்குள்ளாகவே பல பிரபலமான நடிகர்களை வைத்து இயக்கும் நிலைக்கு வந்துவிட்டார். இவர், கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடைப்பெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் இயக்க இருக்கும், இயக்க நினைக்கும் படங்கள் குறித்து பேசினார். 

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த லோகி:

விழாவில் கலந்து கொண்ட லேகேஷ் கனகராஜ்ஜிடம் கல்லூரி மாணவர்கள் பலர் கேள்விகள் கேட்டனர். அதற்கு லோகேஷ், பதிலளித்தார். கூட்டத்தில் ஒருவர், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேட்க, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் எனக்கூறியுள்ளார். பின்பு, இவரது அடுத்தடுத்த ப்ளான்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. 

மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

கனவு படம்:

விழாவில் லோகேஷ் கனகராஜ்ஜின் ட்ரீம் ப்ராஜெக்ட் (கனவு படம்) குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இரும்பு கை மாயாவி’ என்ற கதையை 10 வருடங்களுக்கு முன்பே எழுதியதாகவும் அதுதான் தனது கனவு படம் என்றும் பேசியிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பல நெட்டிசன்கள் இதில் சூர்யாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் 7 நிமிடங்களில் நடித்திருந்தார். இதில் வரும் ரோலெக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு என தனியாக படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் தான் எடுப்பேன் என லோகெஷ் கனகராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைவர் 171 கன்ஃபார்ம்..?

ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து ஞானவேல் ராஜாவுடன் தனது 170ஆவது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171ஆவது படத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இன்றைய விழாவில் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால், இவரே ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

10 வருடங்களுக்கு பிறகு விலகல்:

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருந்த போது 10 படங்களை இயக்கிய பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். இந்த விஷயத்தை இன்று நடைப்பெற்ற விழாவிலும் பேசி அதை உறுதி செய்துள்ளார். ரசிகர்களுக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஏற்கனவே 5 படங்களை இயக்கிவிட்டார், இதில் சூர்யா, ரஜினி, அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் கூறுகிறார். இவை அல்லாமல் எல்.சி.யூ வேறு உள்ளது. 10 படங்களுள் இவையெல்லாம் அடங்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

லியோ படப்பிடிப்பு நிறைவு:

விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து அவருக்காக தயாரித்த கதை, லியோ. இதன் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை ஆகிய இடங்களில் நடைப்பெற்றது. முதலில் விஜய் தனது பங்கு காட்சிகளை முடித்துக்கொடுக்க, அதற்கு அடுத்தடுத்த படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டன. படம், இந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம், லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இருக்கிறதா இல்லையா என்பதை இன்னும் சர்ப்ரைஸாக வைத்துள்ளது படக்குழு. 

லியோ படக்குழு:

விஜய் ஹீரோவாக நடித்துள்ள லியோ படத்தில், இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்திரமாக வருகிறார். த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மிஷ்கின், இப்படத்தில் நெகடிவ் ஷேட் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் மடோனா சபாஸ்டியன், அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்களும் இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி..! விஜய் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்கிறார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News