திரையரங்குகளில் வெற்றிகரமான 50வது நாளில் 'மாநாடு'!

சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படம் திரையரங்குகளில் 50வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2022, 01:53 PM IST
  • மாநாடு படத்தில் கடினமாக உழைத்து உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு சிம்பு திரும்பினார்.
  • மாநாடு படம் பல்வேறு சிக்கல்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ரிலீசானது.
திரையரங்குகளில் வெற்றிகரமான 50வது நாளில் 'மாநாடு'!  title=

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடித்து திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் படம் "மாநாடு"'.  இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார்.  சிம்புவிற்கு மீண்டும் கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்த இந்த படம் இவரின் கேரியரில் ஒரு சிறந்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.  இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அஞ்சேனா கீர்த்தி, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளார்.  இப்பட வெளியீட்டின்போது பல சிக்கல் ஏற்பட்டு பின்னர் இப்படத்திற்காக கடினமாக உழைத்து உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு சிம்பு திரும்பினார். இந்த படம் பல்வேறு சிக்கல்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ரிலீசானது.

ALSO READ | அரைமணி நேர காட்சிக்கு இத்தனை கோடி சம்பளமா?

ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை இப்படத்தின் மூலம் சிம்பு நிறைவேற்றினார் என்றே சொல்லலாம்.  சிம்புவிற்கு இணையாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.  இந்நிலையில் திரையரங்குகளில் 50ஆவது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும்.  மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது.  நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது.  50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது, மிக சவாலானது, இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது.  இடையில் புது படங்கள் வந்து போனாலும் மாநாடு தன் இடத்தை தக்கவைத்து கொண்டான்.  வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக்கொள்வது அல்ல.  வெற்றி தன்னை தானே அறிவித்துக்கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்து கொண்டுள்ளது.

simbu

இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன் TR, இயக்குனர் வெங்கட் பிரபு,பைனான்சியர் திரு.உத்தம சந்த் அவர்களுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்கள், நடிகைகள், வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் பண்பலை நண்பர்கள், மற்ற மொழியிலும் இப்படத்தை கொண்டுசேர்த்த பத்திரிக்கை தொடர்பாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய்,  தந்தைக்கும் இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன் -நன்றி" என்று கூறியுள்ளார்.

ALSO READ | யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்த 'ஊ சொல்றியா மாமா' பாடல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News