விஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுடன் மோதும் கார்த்தி படம்!

கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படமும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'எஸ்கே20' படமும் ஒரே தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 10, 2022, 05:34 PM IST
  • எஸ்கே20 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
  • சர்தார் படத்தை சுதந்திர தினத்திற்கு வெளியிட திட்டம்.
  • அதே தினத்தில் சிவா படமும் வெளிவர உள்ளது.
விஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுடன் மோதும் கார்த்தி படம்! title=

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களாக விளங்கும் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் பலவும் ரசிக்கும்படியாக உள்ளது.  தற்போது இந்த இரு நடிகர்களின் படமும் ஒரே நாளில் மோதிக்கொள்ளப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படமும், அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே20' படமும் சுதந்திர தின வாரத்தையொட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.  

மேலும் படிக்க | RRR பார்ட் 2 எடுக்க ராம்சரண் - ஜூனியர் என்டிஆர் விருப்பம் - ராஜமௌலி கொடுத்த பதில்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படம் 'சர்தார்'.  இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்.  கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த், இளவரசு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தில் 16 வருட நீண்ட இடைவெளிக்குப் பின்னர் லைலா நடித்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னர் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி இயங்குதளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.  தற்காலிகமாக 'எஸ்கே20' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார், மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் நவீன் பாலிஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்தியின் 'சர்தார்' படத்தோடு, இப்படம் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News