ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன் புதிய லுக் -Seepic!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படம் தற்போது சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது! 

Updated: Jul 8, 2018, 11:45 AM IST
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன் புதிய லுக் -Seepic!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படம் தற்போது சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது! 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தாடியுடன் ஸ்டைலாக இருக்கிறார். அந்த புகைப்படத்துடன், "தாடியுடனும், நீண்ட முடியுடனும் இத்தனை நாட்கள் இருந்தேன். தற்போது அடுத்தபடத்திற்காக தாடியை வெட்ட இருக்கிறேன். அதற்கு முன்பு ஒரு போட்டோஷூட் செய்து விடுங்கள் என்று கானா படத்தின் ஹீரோ தர்ஷன் கூறினார். 

அதன்படி அருண் டைடன் ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டைலிஸ் அனுவுடன் இணைந்து ஒரு போட்டோஷூட் செய்தேன். இது எனக்கு புதிய அனுபவம். உங்களும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். 

இந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய சீமராஜா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது ரவிக்குமார் இயகத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பின் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.