வைரலாகும் சிவகார்த்தியேன் மகள் ஆராதனா-வின் பாட்டு...!

இணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடியுள்ள `வாயாடி பெத்த புள்ள' பாடலின் லிரிக்கல் வீடியோ..! 

Updated: Aug 25, 2018, 01:06 PM IST
வைரலாகும் சிவகார்த்தியேன் மகள் ஆராதனா-வின் பாட்டு...!

இணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயனின் செல்ல மகள் ஆராதனா பாடியுள்ள `வாயாடி பெத்த புள்ள' பாடலின் லிரிக்கல் வீடியோ..! 

சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரிப்பாளராக மாறி, தனது கல்லூரி நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜை இயக்குநராகவும், மற்றொருவரான திபு நினன் தாமஸை இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியிருக்கும் திரைப்படம்தான் `கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையமாகவைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஐஷ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். 

அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். படத்தின் டீசர் நேற்று வெளியானது. கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை, இதுதான் திரைப்படத்தின் மையக் கதை. கதைக்கேற்ப படத்தின் டீசரில் இடம்பெற்ற காட்சிகளும் உணர்வுபூர்வமாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்தன. இதேபோல, படத்தின் பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டன. பாடல்களை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா வெளியிட்டார்.

தனது நண்பர்களை இந்தப் படத்தில் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன் ஒருபடி மேலே போய் தனது செல்ல மகள் ஆராதனாவையும் பாடகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். `வாயாடி பெத்த புள்ள' எனத் தொடங்கும் பாடலைத் தனது தந்தை சிவகார்த்திகேயன் மற்றும் பாடகி `வைக்கம்’ விஜயலட்சுமியுடன் சேர்ந்து ஆராதனாவும் பாடியுள்ளார். 

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தந்தை - மகள் இடையேயான அன்பை உணர்த்தும் பாடலாகவும், கதாநாயகியின் சிறிய வயது நிகழ்வுகளைக் காட்டும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் வரிகள், சிவகார்த்தியேன் - ஆராதனாவுக்கு நன்றாகப் பொருந்தியுள்ளது. பாடலைப் பாடும் போது ஆராதனா காட்டும் ரியாக்ஷன்கள், வார்த்தை உச்சரிப்பு, குரல்வளம் அனைத்தும் `கியூட்' ஆக இருப்பதால், இப்பாடல் இணையதளங்களில் தற்போது வைரராகி வருகிறது.