ஷங்கர் பாணியில் இரஞ்சித்? - மீண்டும் ‘அந்த’ மாதிரி படம்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 30, 2022, 05:11 PM IST
  • பா.இரஞ்சித்தின் புதிய படத்தின் தலைப்பு என்ன?
  • விக்ரமின் 61ஆவது படத்தை பா.இரஞ்சித் இயக்கவுள்ளார்
  • அண்மையில் சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்கியிருந்தார்
ஷங்கர் பாணியில் இரஞ்சித்? - மீண்டும் ‘அந்த’ மாதிரி படம்! title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது. விக்ரமும் அவரது மகனான த்ருவ் விக்ரமும் அதில் இணைந்து நடித்திருந்தனர். விக்ரம் அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அவரது 61ஆவது படமான இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து புதிய  தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்துக்கு மைதானம் எனத் தலைப்பு வைக்க படக்குழு முடிவுசெய்துள்ளதாம். ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதை, பாரம்பர்ய பாடி- பில்டிங்கை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாம். மைதானம் எனும் தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். 

மேலும் படிக்க | விடாது துரத்தும் Beast Vs KGF2: என்ன சொல்கிறார் நெல்சன்?

பாடி பில்டராக நடிக்க விக்ரம் சில பிரத்யேகப் பயிற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளாராம். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்தில் பாடி பில்டராக நடித்துக் கவனம் பெற்றார் விக்ரம். தற்போது மீண்டும் அதே மாதிரியானதொரு கேரக்டரில் இப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார். அதே நேரம், இது 'ஐ' படத்தில் இருந்ததுபோல அல்லாமல் விக்ரமுக்கு வித்யாசமான கேரக்டராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்தும், ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை எனும் ஸ்போர்ட்ஸ் தொடர்பான படத்தை அண்மையில் இயக்கியிருந்தார். அப்படம் வட சென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவானது. இந்நிலையில் விக்ரமின் இப்படமும் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாகவே அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க| அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!

Trending News