லாரன்ஸின் துர்கா படத்தில் இருந்து விலகிய இயக்குனர்!

ராகவா லாரன்ஸின் துர்கா படத்தில் இருந்து இயக்குனர் அன்பறிவு விலகியுள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2022, 09:11 AM IST
  • துர்கா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
  • இப்படத்தில் முதல்முறையாக இயக்குனர்களாக அன்பறிவு அறிமுகமானர்.
லாரன்ஸின் துர்கா படத்தில் இருந்து விலகிய இயக்குனர்!  title=

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக 'துர்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி மீம் மெட்டீரியலாக மாறியது.  துர்கா படத்தை கே,ஜி.எப் படத்திற்க்காக தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு முதல் முறையாக இயக்க உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது.   "ராகவேந்திரா புரொடக்‌ஷனின் கீழ் 'துர்கா' படத்தின் இயக்குனர்களாக நமது புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான 'அன்பறிவு' அவர்களை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்! இது ஒரு பவர் பேக் படமாக இருக்கும்! உங்கள் அனைவரின் ஆசியும் வேண்டும்!" என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார். 

durga

மேலும் படிக்க | பிளாட்பார்மில் விஜய் அப்பா SAC - முதல் எபிசோட்

காஞ்சனா படங்களை போலவே இந்த படமும் திகில் கலந்த நகைச்சுவை படமாக இருக்கும் என்று கூறப்பட்டது.  ராகவா லாரன்ஸின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பெரிய அளவிலான தொழில்நுட்பக் கலைஞர்கள் இடம்பெற்று இருந்தனர்.  இந்நிலையில், இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக இயக்குனர் அன்பறிவு தெரிவித்துள்ளனர்.  இது சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது தொடர்பாக அவரகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நாங்கள் இயக்குனர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே சினிமா துறைக்கு வந்தோம். தற்போது ஸ்டண்ட் இயக்குனர்களாக இருந்து வருகிறோம்.  ராகவா லாரன்ஸ் அவர்கள் அவரது தயாரிப்பில் உருவாகும் துர்கா படத்திற்கு இயக்குனர்களாக எங்களை அழைத்தார், நாங்களும் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.  

durga

ஆனால், ஏற்கனவே ஸ்டண்ட் மாஸ்டர்களாக கமிட்டான படங்களின் வேலைகள் நிறைய உள்ளதால் துர்கா படத்தில் எங்களால் தொடர முடியவில்லை.  எங்களின் இந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவிய ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.  இயக்குனராக இந்த படத்தில் இருந்து வெளியேறினாலும் நாங்கள் இந்த படத்தில் எப்போதும் இருப்போம்" என்று தெரிவித்துள்ளனர்.  "இது உங்களுக்கு எவ்வளவு கடினமான முடிவு என்பதை நான் தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்கிறேன்.  மாஸ்டர்களே..உங்கள் சினிமா ஆர்வம் மிக விரைவில் உங்களை இயக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.. ஆல் தி வெரி பெஸ்ட்" என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

 

மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜெயம் ரவி - நயன்தாரா ஜோடி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News