Super Star பற்றிய சூப்பர் செய்தி: இந்த இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கிறாரா ரஜினி?

லாக்டௌனின் போது கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்ததாகவும், இருவரும் ஒரு படத்திற்கான கதையைப் பற்றி முடிவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2021, 06:45 PM IST
  • ‘பேட்ட’ பட இயக்குனருடன் மீண்டும் இணையவுள்ளாரா ரஜினிகாந்த்?
  • ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.
  • அண்ணாத்த படம் நவம்பர் 4 அன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
Super Star பற்றிய சூப்பர் செய்தி: இந்த இயக்குனருடன் மீண்டும் கரம் கோர்க்கிறாரா ரஜினி? title=

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம்தான். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசத்தைக் காட்டும் வழக்கம் ரஜினிக்கு உண்டு.

ஆனால், சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தில், மிகவும் வித்தியாசமான ஒரு ரஜியைப் பார்க்க முடிந்தது.

இப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை (Rajini) படு ஸ்டைலாக, மிக வித்தியாசமாக காட்டியிருந்தார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இப்போது, ​​ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாதில் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அந்த சமயத்தில்தான் ரஜினியும் அவரது அரசியல் வருகை குறித்து அறிவிக்கவிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றாலும், அவரும் நோய்வாய்ப்பட்டார். அவருக்கு இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் இருந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று.

டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ரஜினி பின்னர் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தனது யோசனையை கைவிட்டார். அண்ணாத்த (Annaatthe) படத்தில் 60 சதவிகித படப்பிடிப்பும் பிற பணிகளும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் release date வெளியிடப்பட்டது

அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். படம் நவம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வரும்.

இதற்கிடையில், ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையில் இன்னும் அதிகம் சாதிக்க விரும்புகிறார் என்றும் வயது மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ள போதிலும் இதில் தனது வேகத்தைக் குறைத்துக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்றும் கூறப்படுகிறது.

லாக்டௌனின் போது கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் சந்தித்ததாகவும், இருவரும் ஒரு படத்திற்கான கதையைப் பற்றி முடிவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது, ​​சன் பிக்சர்சும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தலைவர் 169 என்று தற்போது அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj), தான் ரஜினியுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணிபுரியக்கூடும் என்றும், ‘பேட்ட 2’ படம் எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன என்றும் முன்னரே கூறியிருந்தார். பேட்டையின் தொடர்ச்சியாக ‘பேட்ட 2’ படத்தை எடுக்க ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இதற்கேற்ற பல நல்ல கதைகளும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் தனுஷ் நடித்த தனது ‘ஜகமே தந்திராம்’ பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். அடுத்தது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோருடன் அவர் ஒரு படத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அனிருத் இடை அமைக்கிறார். விக்ரமுடனான தனது படத்தை முடித்த பின்னர் ரஜினிகாந்த் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ‘ஆதிபுருஷ்’ படம் பற்றிய அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் Prabhas!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News