சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான படம் சூரரைப்போற்று. இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
சூரரைப்போற்று (Soorarai Pottru) படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. மேலும் இப்படத்தை சூர்யாவின் (Suriya) 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சூர்யாவோடு சேர்ந்து இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி (Aparna Balamurli), ஊர்வசி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்ல நடித்திருந்தனர். இந்த படத்தை சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளினார்கள்.
ALSO READ | கர்ணன் பாணியில் நடிகர் சூர்யா: மாஸ் தகவல் வெளியீடு!
இந்நிலையில் பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி (IMDb) உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
முன்னதாக பலருடைய பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த படம் 2021ம் ஆண்டுக்கான ஷாங்காய் இண்டர்னேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில், திரையிடப்பட இருக்கிறது. வர ஜூன் 11ல இருந்து 20ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு விருது எதுவும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR