பொண்ணுங்கன்னா பலவீனம் இல்லை..பலம்! வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் வெளியானது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 02:04 PM IST
  • வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்.
  • கிராமத்து கமர்சியல் படமாக உருவாகி உள்ளது.
  • பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதை போல் உள்ளது.
பொண்ணுங்கன்னா பலவீனம் இல்லை..பலம்! வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்! title=

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா ஒன்றாக இணைந்துள்ளனர்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.  மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

et

மேலும் படிக்க | 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி! மீண்டும் உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதனை போக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படம் வர உள்ளது.  சமீபத்தில் சூரரை போற்று திரைப்படம் மதுரையில் சில திரையரங்கில் காட்சிகள் போடபட்டது. 

et

எதற்கும் துணிந்தவன் படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது.  இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் மார்ச் 2ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த உடனே சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.  "அவன் சயின்டிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டான்" என்று சத்யராஜின் குரலில் ட்ரைலர் தொடங்குகிறது.  அதிரடி ஆக்ஸன் கலந்த திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி உள்ளது நன்றாக தெரிகிறது.  குறிப்பாக பெண்கள் சம்பந்தபட்ட பிரச்சனையை பேசும் படமாகவும் உள்ளது.  பொண்ணுகனாவே பலவீனம்னு நெனச்சுட்டு இருக்காங்க, அத பலம்னு மாத்தணும் போன்ற முக்கிய வசனங்கள் ட்ரைலரில் இடம்   பெற்றுள்ளது.  ட்ரைலர் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகபடுத்தி உள்ளது.

 

மேலும் படிக்க | மதுரை திரையரங்கில் வெளியான சூரரைப்போற்று!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News