கமல்ஹாசன் மற்றும் லோகேஷ்க்கு சூர்யா கூறிய முக்கிய செய்தி!

விக்ரம் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.  இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2022, 03:25 PM IST
  • விக்ரம் படம் மிகப்பெரிய ஹிட் படமாக மாறி உள்ளது.
  • கமல்ஹாசனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
  • தமிழகம் தாண்டி மிகப்பெரிய வசூல் செய்துள்ளது.
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ்க்கு சூர்யா கூறிய முக்கிய செய்தி! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான விக்ரம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிளாக்பஸ்டர் ஹிட்டான 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் சர்ப்ரைஸ் தோற்றம் தான் தற்போது பலராலும் பேசப்பட்டு, சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் டிரெண்டிங்காக இருந்து வருகிறது. இப்படத்தில் இரக்கமற்ற மற்றும் பயங்கரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இவர் திரையில் தோன்றுவது வெறும் ஐந்து நிமிடங்களே என்றாலும் முழு படத்தையும் இவர் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

suriya

மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? 

சூர்யாவின் பிரமிக்க வைக்கும் நடிப்பு அவரது திரை நேரம் முழுவதும் ரசிகர்களை அலற வைத்தது, சூர்யாவின் ரசிகர்களுக்கும் இந்த படம் கொண்டாட்டமாக அமைந்தது.  மேலும் லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' அல்லது 'விக்ரம் 3' படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  அதில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் இயக்குனரையும், நடிகர் கமலையும் பாராட்டி ட்வீட் செய்து இருக்கிறார்.  இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது.  உங்களுடன் திரையில் இருக்கவேண்டும் என்கிற எனது நீண்ட நாளைய கனவு தற்போது நனவாகி உள்ளது.  இதைச் செய்ததற்கு நன்றி லோகேஷ், அனைவரின் அன்பையும் கண்டு மகிழ்கிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்கில் வைரல் ஆகி வருகிறது.

 

மேலும் படிக்க | 'தளபதி 66' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News