அன்று அழகு நடிகை..இன்று அன்பான அம்மா..நடிகை ரம்பா குறித்த குட்டி கதை இதோ..!

HBD Rambha: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரம்பா. 90’ஸ்களில் மிகப்பெரிய நடிகையாக இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு அப்படியே சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இவருக்கு இன்று பிறந்தநாள்.  

Written by - Stalin | Last Updated : Jun 5, 2023, 12:36 PM IST
  • 90’ஸ் ஹீரோயின்களுள் ஒருவர், ரம்பா.
  • இன்று அவருக்கு பிறந்தநாள்.
  • அவர் குறித்த சில தகவல்கள் இதோ!
அன்று அழகு நடிகை..இன்று அன்பான அம்மா..நடிகை ரம்பா குறித்த குட்டி கதை இதோ..! title=

சினிமா டூ சொந்த வாழ்க்கை.

90’ஸ் இளைஞர்களின் கனவுக்கன்னிகளுள் ஒருவராக இருந்தவர், ரம்பா. இவரது இயற்பெயர் விசயலட்சுமி. திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த ரம்பா, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து, சூப்பர் ஸ்டாருடன் அருணாசலம், கமலுடன் காதலா காதலா, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். 2019-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கனடாவில் வசித்து வரும் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

பிற நாயகிகளுக்கு டஃப் கொடுத்த நடிகை..

தமிழ் சினிமாவில் நடித்து வந்த போது மற்ற ஹீரோயின்களுக்கு கடும் போட்டியாக இருந்து வந்தார். அப்போது முன்னணி நடிகராக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், விஜய் கார்த்திக் பிரபு தேவா ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். இவரது சின்ன சின்ன கியூட் ரியாக்சன்களுக்கு தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் கொடுத்து, நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. தமிழில்  ரம்பா நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை ‘தொடை அழகி’ என்று அன்போடு அழைதனர்.

நடிகை மட்டுமல்ல..தயாரிப்பாளரும் கூட..

ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து த்ரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா மற்றும் லைலா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற  ஆங்கில திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

என்றும் இளமை..

ரம்பா, தற்போது கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் நடிகை ரம்பா. இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடுவதையே ஒரு சில ரசிகர்கள் வேலையாக வைத்துள்ளனர். இப்போது கூட இவர், ரீ-எண்ட்ரி  கொடுத்தால் பல ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யவே முன் வருவார்கள். 47வயதை கடந்து கூட, இன்றும் இவர் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

திருமணம் ஆனா  பின் ரம்பா… 

ரம்பா இலங்கை தமிழர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகள் , குடும்பம் என படு பிஸியாக இருக்கும் ரம்பா சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ் . அவ்வபோது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும்  பங்கேற்று வருகிறார்.

கார் விபத்து..

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில்,  அவரும் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவரின் இளைய மகள் சாஷா மட்டும்  காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
பிறந்தநாள்..

ரம்பாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, அவர் நடித்த படங்கள், அவர் குறித்த தகவல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இவர் நடிகைகள் குஷ்பு, மீனா, சிம்ர், கிரண் போன்ற 90’ஸ் நாயகிகள் போல இவரும் சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News