நடிகரும், இயக்குநருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார்..!

தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார்..!

Last Updated : Mar 22, 2020, 06:48 PM IST
நடிகரும், இயக்குநருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார்..! title=

தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு உடல்நலக்குறைவால் காலமானார்..!

1941 ஆம் ஆண்டு பிறந்த விசு, திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மிகவும் பிரபலமானதாகும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும். குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். சமீப காலமாக வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் ஓய்வு எடுத்து வந்தார். 

இந்நிலையில், கடைசியாக 2013 ஆம் ஆண்டு வெளியான அலெக்ஸ்பாண்டியன் படத்தில் விசு, நடித்திருந்தார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மரணமடைந்தார்.

Trending News